தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு புதிய மினி பஸ் சேவைகள் அறிவிப்பு(Tn plan new mini bus services to villages 2021)
தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களில் மினி பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மினி பஸ் சேவை
தமிழகத்தில் திமுக ஆட்சி அமலுக்கு வந்தது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என திமுக தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து தற்போது கிராமங்களில் இருக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் குக்கிராமம் மற்றும் கிராமப்புறங்களுக்கு புதிய சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது தமிழகத்தில் நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இப்பொழுது இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள் இதனால் பல ஆயிரம் பெண்கள் பயன்அடைந்துள்ளார்கள்.
அதனால் பேருந்தில் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மினி பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கிராமப்புறங்களில் போதுமான பேருந்து வசதி இன்று வரை இல்லாத காரணத்தால் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதி வருங்காலத்தில் தடையின்றி கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கிராமப்புறங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நகர்ப்புறங்களில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்னும் திட்டத்தை தொடர்ந்து தற்போது கிராமங்களுக்கு படிப்படியாக மினி பேருந்துகள் இயக்கப்படும் என்னும் திட்டம் மக்களிடையே மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.
Click here to view your YouTube channel
தமிழகத்தில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களில் இன்று வரை சரியான அரசு பேருந்து வசதி இல்லாமல் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மகளிர்கள் என அனைவரும் பேருந்தில் பயணம் செய்ய குறிப்பிட்ட தூரம் நடந்து சென்று ஆகவேண்டும் என்ற சூழல் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று வரை நிலவி வருகிறது இதை கருத்தில் கொண்டு.
Salmon Fish Nutrients and 8 Amazing Benefits
அனைத்து கிராமப்புறங்களுக்கு மினி பேருந்து சேவை இயக்கினால் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது தமிழக அரசின் திட்டமாக உள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.