தமிழகத்தில் அடிக்கடி சிறிய அளவில் மின்சாரம் நிறுத்தப்படும் அதற்கு என்ன காரணம் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்(TN power cut problem Explained Minister 2021)
தமிழகத்தில் அண்மைக்காலமாக அடிக்கடி சிறிய அளவில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது ஆனால் மின்சாரம் போன சில நிமிடங்களில் வந்து விடுகிறது சில இடங்களில் அரை மணி நேரத்திற்கு மேலாக கூட மின்சாரம் நிறுத்தப்படுகிறது இப்படி திடீர் மின்தடையால் ஊரடங்கு உத்தரவில் இருக்கும் மக்கள் இப்போது இணையதளத்தில் அரசை நோக்கி கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழகத்தில் இப்பொழுது மின்தடை என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும் தமிழ்நாடு முழுவதும் எல்லா நகர்புறம் மற்றும் கிராமங்களிலும் அண்மைக்காலமாக சிறிய அளவில் தினசரி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திடீரென்று 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது அதன் பிறகு மின்சாரம் வந்து விடுகிறது இப்படி இந்த திடீர் மின்சாரம் நிறுத்தத்திற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
மின்கம்பங்களில் பராமரிப்பு பணி என்று ஒற்றை வார்த்தையில் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது ஆம் சில இடங்களில் தற்பொழுது பழுதை நீக்க அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுகிறது இது எல்லாக் காலங்களிலும் நடைமுறையிலுள்ள பழக்க வழக்கம்தான்.
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் டிசம்பர் 2020 முதல் இப்பொழுது வரை ஆறு மாத காலமாக எந்த வித மின்சார பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை இதனால் தமிழ்நாடு முழுவதும் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது தற்போது மிகவும் அவசியமாக தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டுமே இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் போர்க்கால அடிப்படையில் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 7 மாதங்களாக தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகளை பெரும்பாலும் மேற்கொள்ளவில்லை மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை நாம் சந்தித்திருப்போம் அப்படியான மின்தடை கடந்த 6 மாதத்தில் நடந்தது இல்லை இதற்கு காரணம் பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் இருந்தது தான் தற்பொழுது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் சிறிய பழுது ஏற்படுவதால் இப்போது மின்சாரம் தடைபடுகிறது என்கிறார்.
எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து தகவல்.
மிகவும் அவசியமாக தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டுமே கடந்த சில மாதங்களாக செய்யப்பட்டுள்ளது ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் எனவே தீவிர ஊரடங்கு முடியும் வரை மின்தடை தமிழகத்தில் ஏற்படாது என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.