தமிழகத்தில் நாளை முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடங்க உள்ளது(TN private job fair 2021 last date announced)
10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம்
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் நாளை புதிய தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக முன்னதாக நமது இணையதளத்தில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியான பட்டதாரிகள் இந்த வேலை வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்
நாளை முதல் தொடங்க உள்ள வேலைவாய்ப்பில் வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் கலந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
வேலைவாய்ப்பு முகாம்கள் பற்றிய முழுமையான விவரங்கள்
நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சினையை போக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகள் இணைந்து புதிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதற்கு தனியாக ஒரு இணையதளத்தை ஆரம்பித்து அதில் இந்தியாவில் எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் மேலும் இணையதளம் மூலம் உங்களைப் பற்றி அனைத்து விவரங்களையும் பதிவேற்ற படுவதால் அதற்கு தகுதியான வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்
மத்திய அரசின் தேசிய தொழில் சேவை பிரிவில் இருந்து நாளை பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் கலந்துகொள்ள உள்ளது தனியார் நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது தற்போது கொரோனா வைரஸ் காலகட்டம் என்பதால் இளைஞர்களின் நலன் கருதி இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெற உள்ளது
காலிப்பணியிடங்கள் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பல்வேறு நிறுவனங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முகாம் நடைபெறும் – நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
முகாம் நடைபெறும் இடம் – இணையதளம் மூலம் முகாம் நடைபெற உள்ளது அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
முகாம் நடைபெறும் நாள் – ஜூன் 18 19 25 மற்றும் 26 போன்ற தேதிகளில்
கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரை அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
Zodiac signs who make 5 best intimate partner
இந்த இணையதளம் மூலம் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இதனைப்பற்றி தெரியப்படுத்துங்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது போல் அமையும்