TN ration shop 1000 rupees scheme full details

தமிழகத்தில் எந்தெந்த ரேஷன் அட்டைகளுக்கு மாதம் ரூ 1000 வெளியான புதிய தகவல்(TN ration shop 1000 rupees scheme full details)

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அப்போது திராவிட முன்னேற்றக் கழகம்  சார்பாக தேர்தல் அறிக்கையில் திமுக வெற்றி பெற்றால் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்றுள்ளது இப்பொழுது அது சம்பந்தமான பல்வேறு அறிவிப்புகள் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் போலியாகவும் உண்மையாகவும்  வெளிவந்து கொண்டிருக்கிறது

தமிழக அரசு சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக மட்டுமே நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது

TN ration shop 1000 rupees scheme full details

குறிப்பாக கொரோனா பரவல்  காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது மக்களின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் இரண்டு தவணையாக ரூ 4000 வழங்கப்பட்டாலும் மக்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டது

ஆண்டுதோறும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழ் பண்பாடு அடிப்படையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 2500 ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது

அது மட்டுமில்லாமல் பொங்கல் பரிசாக இலவச வேஷ்டி சேலை என அனைத்தும் ரேஷன் அட்டை மூலமாக மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது குறிப்பாக ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவிகளின் பெயர் இருந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது இதனால் ரேஷன் அட்டைகளை மாற்ற விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

மேலும் இது சம்பந்தமான துறை அலுவலகங்களில் மக்கள் அதிகமாக கூடுவதால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு இப்பொழுது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

TN ration shop 1000 rupees scheme full details

தமிழகத்தில் பல வகையான ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது அந்த அட்டைகளில் PHH,PHH-AAY,NPHH,NPHH-S,NPHH-SC என  5 வகை குறியீடுகள் இருக்கும் அதில் PHH குறியீடு இருந்தால் அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும்

MOST  READ  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சத்து

குறியீடு PHH-AAY இருந்தால் பயனாளர்களுக்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும், NPHH இருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களும் வாங்கிக்கொள்ளலாம், NPHH-SC  இருந்தால் ரேஷன் கடைகளில் எந்த ஒரு பொருளும் வாங்க முடியாது அதனை ஒரு அடையாளமாக மட்டும் பயன்படுத்த முடியும்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இந்தநிலையில் இந்த 5 வகையான குடும்ப அட்டையில் PHH,PHH-AAY,NPHH ஆகிய 3 குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டையில் குடும்பத் தலைவி பெயர் இருந்தால் மட்டுமே ரு1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Best food effective in relieving covid-19

இதனால் மற்றவர்கள் தேவை இன்றி ரேஷன் அட்டைகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்

Leave a Comment