TN Ration shop 2400 vacancy full details

தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அமைச்சர் அறிவிப்பு(TN Ration shop 2400 vacancy full details)

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலிப்பணியிடங்களை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் அந்த பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

TN Ration shop 2400 vacancy full details

அரசு காலிப்பணியிடங்களை பற்றிய முழு விவரங்கள்

தமிழகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்கு நியாயவிலை கடைகள் செயல்படுத்தப்படுகிறது இதில் நியாயவிலை கடைகளில் நடப்பாண்டில் 2400 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்  வெளியிடப்பட்டுள்ளது.

மாதந்தோறும் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட தமிழக அரசால் 14 பொருட்கள் அடங்கிய பொருட்கள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய நியாய விலைக் கடைகள் மூலம் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

TN Ration shop 2400 vacancy full details

இதனால் நியாய விலை கடை பணியாளர்கள் மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய கேள்விக்கு பதிலளிப்பது கடை பராமரிப்பது பிரச்சினைகளை எதிர் கொள்வது போன்ற பயிற்சி அளிக்க தமிழக அரசு புதிய முடிவுகளை எடுத்துள்ளது.

இது மட்டும்மில்லாமல் இப்போது ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர முடிவு செய்து உள்ளது அது என்னவென்றால் ஒரு பணியாளர் தொடர்ந்து ஒரே நியாய விலை கடையில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றக்கூடாது அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது அருகில் உள்ள நியாய விலை கடை பணி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் ஊழல் மற்றும் உணவுப்பொருட்கள் கடத்துவது குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தமிழக அரசு கருதுகிறது.

how to get best intense romance in Tamil 2021

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் விரைவில் தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பணியாற்றும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் இனி வரும் காலங்களில் மாதத்திற்கு 30 நாட்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

Leave a Comment