tn ration shop new product release again 2021

தமிழக ரேஷனில் மீண்டும் உளுந்து மசாலா பொருட்கள் வினியோகம் அமைச்சர் உறுதி(tn ration shop new product release again 2021)

தமிழக ரேஷன் கடைகளில் மீண்டும் மானிய விலையில் உளுந்தம் பருப்பு மசாலா பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடந்த விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் தொடங்கி, இப்பொழுது நடைபெற்று வருகிறது இதில் நாள்தோறும் பல்வேறு துறை ரீதியான பல விவாதங்கள் எழுப்பப்பட்டு அவைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

அதன்படி  அமைச்சர்களின் முக்கிய அறிவிப்புகள் நிறைவடைந்து வருகிறது, இந்த நிலையில் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றது அப்போது அதற்கு பதில் அளித்த  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

tn ration shop new product release again 2021

இந்த நிலையில் புதிய அரசு ஆட்சி அமைத்தபோது மாநிலத்தில் கொரோனா பரவல் என்பது இந்தியாவில் முதன்மையாக இருந்தது இதனை அடுத்த மக்களின் துயரத்தை உடனடியாக போக்க வேண்டும் என கொரோனாகால நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் 2 தவணையாகவும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையும் மாநில அரசு வழங்கியது.

இந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று தொடங்கி வைக்கப்பட்டது, இதனால் 290,00,000 குடும்பங்கள் பயன் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில்.

தொடர்ந்த அவர் பேசியது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழக நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் மக்களுக்கு சமையல் பொருட்கள் எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மளிகை பொருட்கள், வழங்கும் திட்டத்தை கடந்த 2007ல் தொடங்கி வைத்தார்.

Top 10 health benefits of eating fish

கடந்த ஆட்சியில் அந்த திட்டத்தில் இருந்த உளுந்தம் பருப்பு, கோதுமை மாவு, மளிகை பொருட்கள், போன்றவை காணாமல் போனதாக திமுக அமைச்சர் குற்றம்சாட்டினார்.

tn ration shop new product release again 2021

இதனை அடுத்து இனிவரும் காலங்களில் விட்டுப்போன பொருட்கள் அனைத்தும் தமிழக நியாயவிலை கடைகளில் மீண்டும் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Niti aayog recommended about 3rd wave corona

இந்த அறிவிப்பு மக்களிடையே மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக நியாய விலை கடைகளில் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட அளவு மளிகை பொருட்கள் வழங்குவது என்பது இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இதுவரை செய்ததில்லை.

Leave a Comment