tn ration shop new Wi-Fi points useful 2022
விரைவில் தமிழக ரேஷன் கடைகளில் நீங்கள் எதிர்பார்த்த இந்த சேவை கிடைக்கும் சூப்பர் திட்டம் அறிவிப்பு..!
இப்போது அனைத்து இடங்களிலும் இணையதள வசதி தான் முக்கிய தேவையாக இருக்கிறது மக்களுக்கு.
குறிப்பாக தகவல் பரிமாற்றம், தினசரி வேலை, கல்வி மற்றும் பலவற்றிற்கும் இணையதளம் தான் அதிகமாக பயன்படுகிறது என்று தெரிவிக்கலாம்.
இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இணையதள வசதியை (wi-fi) கொண்டு வர மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இதற்கு தேவையான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.
இனி எளிதாக கிடைக்கலாம்
மேலும் நகர்ப்புறங்களில் இணையசேவை பெருமளவிற்கு கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும்,இணையதள வசதி மக்களுக்கு கிடைப்பதில்லை என்று தான் சொல்லவேண்டும்.
எனவே இந்த குறைபாட்டை தீர்க்க கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும், எளிதாக (wi-fi) இணைய சேவையை மூலம் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில்
அதே போல் இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் 35,323 நியாயவிலைக் கடைகள் அமைந்துள்ளன, பின்பு இதில் 10,279 கடைகள் பகுதிநேர கடைகளாக இப்போது வேலை செய்கிறது.
கடைகள் அமைந்திருக்கும் சூழல்
குறிப்பாக சில கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது மேலும் 2 கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் கடையும் செயல்படுத்தப்படுகிறது.
எனவே கடைகள் இருக்கும் இடம் வசதிகள், வாடகை கட்டிடம், என்றால் உரிமையாளரின் ஒப்புதலைப் பெறுவது கடைகள் அமைந்திருக்கும் இடங்களின் சூழல் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு கேட்டுள்ளது.
இணையதளத்தின் வேகம்
tn ration shop new Wi-Fi points useful 2022 இப்போது கிராமப்புறங்களில் இணையதள சேவைகளின் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்சாகத்தான் உள்ளது எனவே அரசின் புதிய இணையதள வசதி மூலம் இது பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 2022-இன் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்..!
அதேபோல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மக்கள் ரேஷன் கடைகள் மூலம் இணையதள சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
அதேபோல் அரசு சேவை என்பதால் கட்டணமும் குறைவாக இருக்கும் பின்பு ரேஷன் கடைகளுக்கு வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய திட்டமாக இது அமையும்.
மேலும் இந்த இணையதள வசதியை விட 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை இந்தியாவில் உருவாக்கி உள்ளது.