TN Rs 1000 amount about scheme full details

தமிழகத்தில் ரூ.1000 உரிமைத் தொகை தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் அதிர்ச்சியில் குடும்ப தலைவிகள்.(TN Rs 1000 amount about scheme full details)

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000  உரிமை தொகை, உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலின் போது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு மக்களிடத்தில் ஆசையைத் தூண்டி விடும் நோக்கில் அரசியல் கட்சிகள் பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அதன் மூலம் ஆட்சிக்கு வருகிறார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை எப்பொழுதும் ஏமாறுவது பொதுமக்கள் மட்டுமே.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

TN Rs 1000 amount about scheme full details

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தது.தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000  உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்று பல தரப்பு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் இன்றுவரை.

ரேஷன் அட்டையில் குடும்பத்தலைவியின் பெயர், புகைப்படம் இருந்தால் மட்டுமே உதவித் தொகை கிடைக்கும் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் மாற்றம் போன்ற அனைத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தமிழகத்தின் நிதிச்சுமை மிக கடுமையான சூழல் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த கொரோனா வைரஸால்  தொழில்துறை மற்றும் அரசாங்கத்திற்கு வருமானம் மிகவும் குறைந்து விட்டது இதனால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது என்று ஒரு அறிவிப்பை பொழுது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

TN Rs 1000 amount about scheme full details

அனைத்து குடும்ப தலைவிகளுக்கு அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு மக்களிடத்தில் மிகப் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click here to view our YouTube channel

இது குறித்து உதவித்தொகை ஏழைகளுக்கான திட்டம் என்று நிதி வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து தகுதியான அளவுகோலை அரசு வகுத்து வருவதாகவும் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

8 Amazing Benefits Of Eating Mango in tamil

ஆனால் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் உரிமை தொகை சமமாக வழங்கப் பட வேண்டும் என குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள். அரசின் நிதிநிலை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் இப்பொழுது ஒரு புதிய அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

Leave a Comment