TN TRB 15000 Vacancies Details
TN TRB 15000 Vacancies Details தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் 15000 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர், பணிகளை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் எப்பொழுது
TN TRB 15000 Vacancies Details தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை அரசு பள்ளி, கல்லூரி, கல்வியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில், உள்ள காலி பணியிடங்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் பலமுறை வெளியிடப்பட்டும் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள்
TN TRB 15000 Vacancies Details அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியல் கல்லூரியில் உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு 4000 பணியிடங்களும் வட்டார கல்வி அலுவலர் பணியில் 23 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 155 விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,874 இடைநிலை ஆசிரியர் பணிக்கு 3,987 மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 15000 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதனால் ஊழியர்கள் நியமனம் விரைந்து நடத்தப்பட வேண்டும், என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் பள்ளி பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, என கல்லூரிகளில் 15,000 மேற்பட்ட காலி பணியிடங்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது,இந்த பணியிடங்களுக்கு தேர்வு எப்பொழுது நடைபெறும்.
இந்தப் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அரசுக்கு இதனை பற்றி தொடர்ந்து அழுத்தங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இதனால் விரைவில் இது பற்றிய முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.