TN unemployment 1000 rupees scheme Latest news
தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கு மாதம் 1000/- ரூபாய் உதவித்தொகை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு(TN unemployment 1000 rupees scheme Latest news)
தமிழக அரசு சார்பில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
அதில் சிறந்த திட்டமாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 1000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் ஜூலை மாதங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்ததால் இப்பொழுது இதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் அரசு பணிகளை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை ஊக்கப்படுத்த தமிழக அரசு சார்பில் சிறிய உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது
இளைஞர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க தொகை மாறுபடும் தற்போது மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் இதுதொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்
பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ 300 தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு பள்ளிப்படிப்பில் மாதம் ரூ 200 மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ 400 பட்டதாரிகளுக்கு மாதம் 200 என பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படுகிறது
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களுடைய குடும்ப வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் இதற்கு உங்களுடைய கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து நீங்கள் சான்றிதழ்கள் பெற வேண்டும்
MOST READ நீளமான அடர்த்தியான கூந்தல் வளர இலவங்கம்பட்டை
இதில் வயது வரம்புகள் உண்டு விண்ணப்பதாரர்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி படிப்பினை தமிழ்நாட்டில் முடித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இதில் மாற்றுத்திறனாளிகள் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வயது வரம்பு வருமான வரம்பு என எந்த நிபந்தனைகளும் இல்லை அவர்களுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது
Best food effective in relieving covid-19
இதற்கு விருப்பம் தகுதியுடைய நபர்கள் தங்களுடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு இப்பொழுது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது