TNPSC group 4 exam date best tips
டிஎன்பிசி குரூப் 4 தேர்வு முடிவுகள் என்னாச்சு முறைகேடு செய்ய சதி திட்டமா நாம் தமிழர் சீமான் கேள்வி..!
டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு இன்னும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளதை பார்த்தால் முறைகேடு செய்வதற்காகவே திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருவதாக சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.
ஏறத்தாழ 18 லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிடுவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக தேர்வு முடிவுகளை தள்ளிப் போட்டது.
பின்னர் டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையம் இரண்டாவது முறை அறிவித்திருந்த நிலையில் அப்போதும் வெளியாகவில்லை.
மூன்றாவது முறையாக
TNPSC group 4 exam date best tips தற்போது மூன்றாவது முறையாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்போவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்கான காரணம் என்ன யாருடைய லாபத்திற்கு இப்படி தேர்வாணையம் செயல்படுகிறது.
லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் தேர்வாணையம், திராவிட முன்னேற்றக் கழகமும் விளையாடுகிறது என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
தேர்வு முடிவுகள் எப்போது
TNPSC group 4 exam date best tips தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளார்கள் என்பது திமுக அரசுக்கு தெரியாதா அவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமில்லை.
இந்த கேள்விக்கெல்லாம் நிர்வாக திறமையற்ற திமுக அரசு என்ன பதில் கூறப் போகிறது இரவு பகல் பாராமல் கடின உழைப்பு செலுத்தி படித்து தேர்வு எழுதிய தேர்வின் முடிவுகள் தெரியாமலும்.
வேறு வேலைக்கு செல்ல முடியாமலும் ஏழை எளிய கிராமப்புற இளைஞர்கள் தவித்து வருகிறார்கள் என சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதவில்லை, இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது இந்த அரசு தேர்வு முடிவுகளை காலம் தாழ்த்துவது நோக்கம் என்ன என்று சீமான் கேட்டுள்ளார்.