TNPSC Group exam offcials best explain 2023
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு எழுந்து சந்தேகம்? தவறு நடக்க வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் விளக்கம்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
குரூப் 4 மதிப்பெண் கணக்கெட்டு பணிகள் முழுவதும் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு அதிகாரிகளின் நேரடி பார்வையின் மூலம் சரிபார்ப்பு நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group exam offcials best explain 2023 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நடைபெற்று 8 மாதங்களுக்கு பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில் அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள் முடிவுகள் வெளியிட தாமதமானது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
முறைகேடு சந்தேகம் நடப்பது என்ன
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியானது.
தாமதமாக தேர்வு முடிவுகள் வெளியானதால் முறைகேடு நடைபெற்ற இருக்கலாம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
TNPSC Group exam offcials best explain 2023 இதற்கு அடிப்படை என்னவென்றால் குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2000 தேர்வாணர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருதாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஒரே பயிற்சி மையத்தில் அதிக நபர்கள்
TNPSC Group exam offcials best explain 2023 குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் 6 இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு பயிற்சி மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வாளர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கின்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது.
இதற்கிடையே தங்கள் தேர்வு மையத்திலிருந்து 2000 நபர்கள் தேர்வானது உண்மைதான் என்று அந்த பயிற்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
TNPSC Group exam offcials best explain 2023 தேர்வான நபர்களின் பட்டியலை அளிக்கவும் தயார்யேன முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற செய்துள்ளோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி கொடுத்த விளக்கம் என்ன
TNPSC Group exam offcials best explain 2023 எந்தவிதமான தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக்கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை இதில் ஏதேனும் குளறுபடிகள் அல்லது தவறோ நடந்து இருப்பதாக தேர்வாளர்கள் கருதினால்.
உரிய ஆதாரங்களோடு grievance.tnpsc@tn.gov.in என்ற இமெயில் மூலம் புகார் தெரிவிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.