உடற்தகுதி தேர்வுகளுக்கான முழு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது(TNUSRB physical exam start in tn 2021 now)
தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பு இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு காலியாக இருந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் இந்த பணிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் சிறை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வுகளை தமிழக அரசு நடத்தியது.
தற்போது இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என்று தமிழக காவல்துறை செய்தியை வெளியிட்டுள்ளது.
இப்பொழுது இதற்கு தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர்கள் இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://www.tnusrbonline.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் தேர்ச்சி பெற்றவர்கள் ஹால் டிக்கெட்டை குறிப்பிட்ட ஆவணங்களை உடற்தகுதி தேர்வுக்கு கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்வில் தேர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கைபேசி மற்றும் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லக்கூடாது கொரோனா பரவல் காரணமாக இரட்டை முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.
கிருமிநாசினி எடுத்துச் செல்லவேண்டும், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும், அது மட்டுமில்லாமல் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் அவசியம் தேவை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த 7 உணவுகள் உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
இப்பொழுது ஊரடங்கு உத்தரவு கிட்டத்தட்ட முழுவதும் விளக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழக அரசு இந்த உடற்தகுதி தேர்வுக்கு வரும் இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
3ம் அலை தொடங்கியது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது அதனால் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் ஒரு இடத்தில் அதிகமாக கூட்டம் சேரக்கூடாது உடற்தகுதி தேர்வு முடிந்தவுடன் வீட்டிற்கு செல்ல வேண்டும் பொது இடத்தில் எச்சில் துப்பக் கூடாது.
7 Best Tips for long term married life
என பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்தில் கடுமையான சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.