Top 10 best small business ideas in tamil

Top 10 best small business ideas in tamil

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 சிறு தொழில் பட்டியல்கள்..!

இந்த காலத்தில் இருக்கும் இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும், என்று ஆர்வம் காட்டி வருகிறார்கள், சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்றால் அது மட்டும் போதாது.

அதற்கான முதலீடும், யோசனைகளும், தேவை அந்த வகையில் நாம் இந்த கட்டுரையில் பெரிய அளவில் முதலீடு இல்லாமல்.

சிறிய முதலீடு செய்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு பயன்படுத்தப்படும் சிறந்த முதல் 10 தொழில் வகைகள்.

அழகு நிலையம் (Beauty parlour)

முக அலங்காரத்தின் தேவை எப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது, பண்டிகை நாட்கள், சாதாரண நாட்களில், மற்றும் திருமண விழாக்களில்.

இதற்கான வரவேற்பு அதிகம், பெண்கள் முதல், ஆண்கள் வரை, தலைமுடியும், சருமத்தை, பராமரிக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்கிறார்கள்.

உங்களுக்கு (Makeup, Pedicure Manicure, Hair cutting) நன்கு தெரிந்தால் தொழிலில் நீங்கள் சிறந்த லாபத்தை பெற முடியும்.

கணினி பயிற்சி (Computer Training)

கணினி பற்றி முழு விவரங்களையும் உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் தாராளமாக இந்த தொழிலை செய்ய ஆரம்பிக்கலாம்.

கம்ப்யூட்டர் பற்றிய அறிவு வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

பழைய வாகனம் விற்பனை செய்தல் (Second Hand Vehicles)

எல்லா நபர்களும் வண்டி வாங்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கும், அதற்கு சிலரிடம் பணம் இருக்காது, அதனால் பலரும் பழைய வாகனத்தை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

புதிய வாகனங்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நல்ல தரமான பழைய வாகனங்களை விற்பனை செய்வதால், இதில் கணிசமான லாபம் உங்களால் பெற முடியும்.

விளம்பர நிறுவனங்கள் (Advertising companies)

சிறு தொழில் நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள், மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வரை, அவர்களது பொருட்களை விளம்பரப்படுத்தும் மூலம்.

இந்தத் தொழிலை நீங்கள் தொடங்கலாம்,(YouTube, Instagram, Twitter) இப்பொழுது போன்றவற்றில் கூட விளம்பரம் செய்து சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள்.

உர உற்பத்தி (Fertilizer production)

இயற்கை பாதுகாப்பதற்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்பொழுது மாடித்தோட்டம், சிறிய தோட்டம், மரம் நடுவது, செடிகள் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களுக்கு இதனைப் பற்றி விழிப்புணர்வு என்பது அதிகமாகவே கிடைத்துவிட்டது, இயற்கையை பாதுகாக்க வேண்டும் என அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

நீங்கள் அவர்களுக்கு தேவையான இயற்கை உரங்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகமான வருமானத்தை உங்களால் பெறமுடியும்.

Top 10 best small business ideas in tamil

கோழி வளர்ப்பு (Poultry Farming)

எப்பொழுதும் அதிக வரவேற்ப்பை பெறும் தொழில் என்றால் அது இறைச்சி தொழில் தான். நீங்கள் கோழி வளர்ப்பு. ஆடு வளர்ப்பு. மூலம் இந்தத் தொழிலில் அதிகமான லாபத்தை பெற முடியும்.

அதுமட்டுமில்லாமல் முட்டையும் விற்பனை செய்யலாம், கோழி வளர்ப்புக்கு, சிறிய நுணுக்கங்கள் பற்றி முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும்.

வீடியோ உருவாக்கம் மற்றும் போட்டோ ஷூட்டிங் (Video Creating and Photo Shooting)

நீங்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும், இந்த தொழிலை செய்வதற்கு உங்களிடம் சிறந்த புகைப்பட கேமிரா மற்றும் வீடியோ கேமிரா எடிட்டிங் பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும்.

திருமண விழா, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் கொண்டாட்டம், திருவிழாக்கள், போன்ற அனைத்திற்கும் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடுப்பதே கட்டாயம் இன்றைய காலகட்டத்தில் தேவைப்படுகிறது.

உணவு பரிமாறும் சேவை (Catering service)

திருமணம் மற்றும் அனைத்து வகையான சுபகாரியங்களுக்கும் மக்களுக்கு உணவு பரிமாறுவதற்கு நபர்களை தேடி வருகிறார்கள் இதற்கு உங்களுக்கு நல்ல உணவு தயாரிக்க.

தெரிந்திருக்கவேண்டும் மற்றும் உணவு பரிமாறுவதற்கு அனைத்து நுணுக்கங்களையும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

Top 10 best small business ideas in tamil

பயிற்சி பள்ளி (Training School)

தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலான இளைஞர்களுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

இதற்கு நீங்கள் ஒரு சிறந்த பயிற்சி பள்ளியை தொடங்கினால்  அதிகமான வருமானத்தை உங்களால் பெற முடியும்.

சுவையான வெங்காய சமோசா செய்வது எப்படி..!

விநியோக முகவர் (Delivery agent)

இன்றைய காலகட்டத்தில் சிறிய உணவு பொட்டாளம் முதல், பெரிய வீட்டு உபயோக பொருட்கள் வரை, அனைத்துப் பொருட்களும் இணையதளம் மூலம் புக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

How to take Aavin Milk dealership quickly 2022

இதனை சரியான நபரிடம் சேர்ப்பதற்கான ஏஜென்டுகள் அதிகமான அளவில் எப்பொழுதும் தேவைப்படுகிறது.

பிளிப்கார்ட், அமேசான், போன்ற நிறுவனங்களில் நீங்கள் ஏஜென்ட் ஆரம்பித்தால் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

Leave a Comment