விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் தரும் சிறந்த ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது எப்படி.!!!(Top 10 Business Ideas for Agriculture 2020)
எல்லா தொழில்களிலும் எப்பொழுதும் புதிய செயல் முறைகளை பின்பற்றுபவர்கள் மட்டுமே அந்த தொழிலில் வெற்றி பெற முடியும் .இதில் விவசாயத் துறையும் முக்கியமாக அமைகிறது ஏனென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் புதிய உணவு முறைகளுக்கு எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான, இயற்கையான முறையில் கிடைக்கும் உணவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது சந்தைகளில்.
விவசாயத் துறையில் இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த காலகட்டங்களில் விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது அதுதான் ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த முறையில்
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சிறந்த வணிக யோசனை அமைப்பது.
இந்த அணுகுமுறையில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும் மேலும் எப்பொழுதும் சிறிய தொகை பணம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு யோசனைகளையும் சரியாக பின்பற்றுபவர்கள் விவசாயத்துறையில் ஆண்டுமுழுவதும் பணம் பெற முடியும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணை திட்டம் வகுக்கும்போது நிலங்களுக்கு ஏற்ப பயிர் திட்டத்தை அமைக்க வேண்டும். மேலும் அந்தப் பயிர் திட்டத்திற்கு ஏற்ப உங்களுடைய பொருளாதார ரீதியில் பல தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உப தொழில்களை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். தேர்ந்தெடுக்கும் உப தொழில்கள் ஒன்றே ஒன்று எப்போதும் சார்ந்து இருக்க வேண்டும் அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உபதொழில் உங்களுக்கு தேவையான பொருள்கள் அந்தந்த பண்ணையில் உற்பத்தி செய்ய வேண்டும் .
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒரு விவசாயி அவர் பல தொழில் செய்ய வேண்டும் என்பதை விட அவர் ஒன்றுக்கு மேற்பட்ட வரை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதே பொருள். இதன் மூலம் மறுசுழற்சி என்ற முறையில் எப்பொழுதும் சிறிய தொகை கொண்ட பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
தினசரி வருமானத்திற்கு சிறந்த முறையில் வணிக யோசனை அமைக்க வேண்டும்.
உங்களுடைய விளைநிலங்கள் அல்லது வீடுகளில் வீணாகும் தானியங்கள் உணவு வகைகளை நீங்கள் பணமாக மாற்ற வேண்டும். அதற்கு கறவை மாடுகள் வைத்து பால், மோர், வியாபாரம் செய்யலாம், மீன் வளர்ப்பில் ஈடுபடலாம், காய்கறிகள் ,கீரைகளை சுழற்சி முறையில் பயிரிடலாம், வான்கோழி, கினி கோழி, வாத்து ,காடை, இயற்கை உரம், தயாரித்தல், நாட்டுக்கோழி முட்டை விற்பனை, இதன் மூலம் உங்களுக்கு எப்பொழுதும் சிறிய தொகை கிடைத்துக்கொண்டே இருக்கும். மேலும் இப்பொழுது இதை ஒரு பெரிய முதலீடாக சில படித்த இளைஞர்கள் தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதன் மூலம் அவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த முறைகளை பின்பற்றலாம்.
மாதத்திற்கு ஒரு முறை வருமானம் வருமாறு அமைக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் உள்ள வேளாண் அலுவலகங்களில் இதற்கான வணிக யோசனைகள் சிறந்த முறையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. மேலும் சிறு தானியங்கள், பயிர் வகைகள் போன்றவற்றை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விற்பனை செய்யும் முறையில் காலத்திற்கேற்ப பயிரிட்டு பலன் பெறலாம்.
வருடத்திற்கு வருமானம் தரக்கூடிய யோசனைகள்.
தேக்கு மரங்கள், பாக்கு மரங்கள், சந்தன மரங்கள், விளைநிலங்களில் ஆங்காங்கே வளர்ப்பதன் மூலம் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும். மேலும் இந்த மரங்களை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் மற்றும் மரங்களுக்கு இடையில் நன்கு வளரக்கூடிய மண்ணுக்கு ஏற்ப சிறு பயிர்களை ஊடு பயிர்களாக வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் திட்டமிடுதல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Best Hair care Health 5 tips in Tamil
உங்கள் விளை நிலங்களை சுற்றி வேலிக்கு கண்டிப்பாக அமைக்க வேண்டும் இதன் மூலம் உங்கள் விளை நிலங்களில் உள்ள கால்நடைகள் பறவைகள் வெளியிடம் கழிவுகளை நீங்கள் உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நிலத்தின் தற்போதைய அடிப்படை வசதிகளான, நீர், மின்சாரம், சாலை வசதி, பாதுகாப்பு மண், போன்றவைகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
சிறந்த முதலீட்டு திட்டம் தேசிய கால்நடை பணி 2020.
ஒருங்கிணைந்த பண்ணையில் நீங்கள் சங்கிலித்தொடர் முறையில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தென்னை மரத்திலிருந்து தென்னைநார், மட்டை, தேங்காய், தேங்காயிலிருந்து கொப்பரை எடுப்பது, தேங்காய் ஓடு, போன்ற முறையில். மேலும் பாலிலிருந்து வெண்ணெய், மற்றும் தயிர், மோர் எடுப்பது ஒரு சிறிய தொழிலாக அமைத்து செயல்பட்டால் சிறிய தொகை உங்களுக்கு எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.twitter