Top 10 export products new list in India
இந்தியாவின் முதல் 10 ஏற்றுமதி பொருட்கள் பட்டியல்..!
நமது இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு,மற்றும் கடல் பரப்பு, அதுமட்டுமில்லாமல் மக்கள் தொகையில் உலகில் 2ம் இடத்தில் உள்ளது.
இந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏற்றுமதி என்பது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அல்லது சேவைகளை மற்றொரு நாட்டிற்கு அனுப்புவது.
அதாவது வெளிநாட்டிற்கு பொருட்களை விற்கும் விற்பனையாளர்களை ஏற்றுமதியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
உலக சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7% ஆக இருக்கிறது.
ஏற்றுமதி பொருட்களை கப்பல் வழி அல்லது விமானம் வழியாக அனுப்பப்படுகிறது, அப்படி இந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது, அந்த பட்டியல் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதி
இந்தியாவில் 63 சதவீத ஜவுளி சந்தை உள்ளது, ஆடை தயாரிப்பில் குறிப்பாக ஜூட் தயாரிப்பில் இந்தியா பல ஆண்டுகளாகக முதலிடம் வகிக்கிறது, 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை இந்தியா ஒவ்வொரு வருடமும் ஏற்றுமதி செய்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
9 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்திய ஏற்றுமதி செய்கிறது, இருப்பினும் அதிக அளவில் எலக்ட்ரானிக் பொருட்களை இந்தியா இறக்குமதியும் செய்து வருகிறது.
ஆட்டோமொபைல் ஏற்றுமதி
உலகில் உள்ள பல முக்கிய நாடுகளுக்கு தேவைப்படும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், இன்ஜின், ஏற்றுமதி போன்றவற்றை இந்தியா செய்து வருகிறது.
குறிப்பாக 2019 ஆம் நிதியாண்டில் இவற்றின் மதிப்பு 155 பில்லியன் டாலராகும்.
பயோகெமிக்கல்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பயோகெமிக்கல் மதிப்பு 14 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மருந்து துறை
கொரோனா வைரஸ் பிறகு இந்தியாவின் மருந்து துறை ஏற்றுமதி என்பது உச்சத்தை தொட்டுள்ளது எனலாம்.
தடுப்பூசிகள் அதுமட்டுமில்லாமல் சில மருந்துகளும் இப்பொழுது அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகில் தடுப்பூசி மருந்து உற்பத்தியில் இந்தியா எப்பொழுதும் முன்னணியில் வகிக்கிறது,மருந்து துறை மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும் இலாபம் என்பதே 15 பில்லியன் டாலராகும்.
இயந்திரங்கள்
அனைத்து நபர்களும் எளிதாக பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் இயந்திரங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
11 சதவீத வளர்ச்சியுடன் 14 பில்லியன் டாலர் பெற்று இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.
தங்க நகைகள்
உலக தங்க சந்தையில் உற்பத்தி செய்யப்படும் தங்கங்களில் இந்தியா 20 சதவீதம் பயன்படுத்தி வருகிறது.
அதில் 75 சதவீதத்தை தங்க நகையாக இந்திய மக்கள் பயன்படுத்துகிறார்கள், இவற்றில் 30 சதவீதம் தயாரிக்கப்படும் தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பெட்ரோலியம் பொருட்கள் அல்லது கச்சா எண்ணெய்
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெட்ரோலிய பொருட்கள் முக்கியமானதாக இருக்கிறது.
இந்தியாவிலிருந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள்.
இலங்கை, மாலத்தீவு, நேபாளம், பூடான், இந்தோனேஷியா, மொரிஷியஸ், போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஹோட்டல் சுவையில் வீட்டில் எக் ரைஸ் செய்வது எப்படி..!
இரும்பு மற்றும் ஸ்டீல்
இரும்பு மற்றும் ஸ்டீல் போன்ற பொருட்களை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதிக அளவில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது.
Manapen Alangaram new design in tamil 2022
தற்போது ஏற்றுமதி செய்வதில் இந்தியா 10 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.
தானியங்கள்
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் ஏற்றுமதி செய்வதில் இந்தியா இப்பொழுது முதலிடத்தில் உள்ளது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களின் மதிப்பு சுமார் 12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.