top 10 foods for white skin naturally need
அழகான பளபளப்பான முகம் மற்றும் சருமம் வேண்டுமானால் இந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்(top 10 foods for white skin naturally need)
21ஆம் நூற்றாண்டில் எந்த ஒரு நபரும் தங்களுடைய முகம் மற்றும் உடல் சருமத்தை அழகாக புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் இதற்கு 100 ரூபாய் முதல் லட்சக்கணக்கான ரூபாய் வரை செலவு செய்கிறார்கள் அழகு சம்பந்தமான பொருட்கள் மார்க்கெட்டில் எல்லா வகைகளிலும் விற்றுத் தீர்ந்து விடுகிறது மேலும் வலைதளம் மற்றும் யூட்யூபில் கூட அழகு சம்பந்தமான பொருட்களை பற்றி மட்டுமே அதிக அளவில் மக்கள் தேடுகிறார்கள் அந்த அளவிற்கு தங்களின் உடல் அழகின் மீது அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை வேண்டுமென்றால் இயற்கையான ஊட்டச் சத்துக்களை எடுத்துக் கொண்டால் மட்டுமே பெற முடியும் இதனால் நாம் விரும்பியது போல் நல்ல அழகான சருமத்தை பெறலாம் மேலும் ஆரோக்கியமான உடலையும் பேணிக்காக்கலாம் குறிப்பாக உண்ணும் உணவில் நாம் எப்பொழுதும் ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும்
அதற்கு பச்சை இலைக் காய்கறிகள் வைட்டமின் சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஒருநாளைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் உடற்பயிற்சி செய்தல் நடைப்பயிற்சி யோகா தியானம் மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்
அதிகமான பணம் கொடுத்து மார்க்கெட்டில் இருக்கும் கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதால் நாளடைவில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது
இதற்கு இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம் மேலும் உணவு என்பது முதன்மையாக அமைகிறது அதனைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்
கேரட்
கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அதுமட்டுமின்றி இவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் கண்பார்வைக்கும் சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதனால் நீங்கள் பச்சையாக இருக்கும் கேரட்டை தினமும் சாப்பிட்டு வரலாம் அல்லது கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் நன்கு பளபளப்புடன் மாறும் மேலும் பற்களில் இருக்கும் கரைகளும் கரைந்துவிடும் நாளடைவில்
தக்காளி பழம்
தக்காளி அனைவரின் உணவில் இன்றியமையாத பொருளாக உள்ளது இந்த சிவப்பு நிற அழகான தக்காளி லைகோபைன் சத்து அதிகமாக கொண்டுள்ளது இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் அல்லது சருமம் முழுவதும் பூசினால் சருமம் பொலிவாக பளப்பளப்பாக மாறும் மேலும் உடல் எடை குறைந்து புற்றுநோய் வருவதும் தடுக்கப்படும் இதனால்
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது மேலும் வைட்டமின் ஏ சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கி விடுகிறது இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் கறைகள் எளிதாக நீங்கிவிடும் எனவே இந்த பழத்தை முகத்தில் அடிக்கடி தடவி வந்தால் முகம் பளபளப்பாகும் மட்டுமில்லாமல் கரும்புள்ளிகள் சேராமல் பாதுகாக்க்கும் இவற்றை சாப்பிட்டால் முறையான மாதவிடாய் சுழற்சி நடைபெறும்
கிவி பழம்
கிவி பழத்தில் சிட்ரஸ் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது இவற்றை நீங்கள் சாப்பிட்டு வந்தால் மென்மையான சருமம் கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் கிவிப் பழத்தை நன்கு அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் முகத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள் நீங்கும்
பீட்ரூட்
பீட்ரூட் இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது என்று சிறுவயது முதல் படித்து வருவோம் இதனை சாப்பிட்டால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் அழகான கண்ணங்கள் மற்றும் உடம்பில் அங்கங்கே இருக்கும் சிறு காயங்கள் வடுக கூட நாளடைவில் மறைந்துவிடும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நீங்கள் எடுத்து வந்தால் தினம்தோறும் எந்த ஒரு நோயும் உங்களை நெருங்காமல் இருக்கும்
சிவப்பு குடைமிளகாய்
இந்த சிவப்பு குடைமிளகாயில் முக்கியமான ஊட்டச்சத்தான லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது இந்த குடை மிளகாயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் உடல் சருமத்தின் பாதிப்புகள் ஏற்படுவது குறையும்
மீன்
ஒமேகா 3 ஒமேகா 6 போலிக் அமிலம் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான அனைத்து வைட்டமின்களும் இந்த மீனில் நிறைந்துள்ளது எனவே அழகான சருமத்தை தேடும் நபர்கள் உணவில் அடிக்கடி மீன்களை எடுத்துக்கொள்ளலாம் சருமமும் அழகாக மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் எடுத்துக் எடுத்தது போல் இருக்கும்
ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் கடலில் பிடித்த உயிருடன் இருக்கும் மீன்களை எடுத்துக் கொள்ளுங்கள் இந்த மீன்களில் மட்டுமே அனைத்து ஊட்டச்சத்துகளும் மேலும் இந்த மீன் ஆரோக்கியமாக இருப்பதால் உங்களுக்கு எந்த ஒரு உடல் உபாதைகளும் தோன்றாமல் இருக்கும்
குளத்தில் ஊசி போட்டு வளர்க்கப்படும் மீன்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலிற்கு பக்கவிளைவுகள் மட்டுமே ஏற்படுமே தவிர எந்த ஒரு நன்மையும் கிடைக்காது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்
ஸ்ட்ராபெரி பழம்
ஸ்ட்ராபெரி பழம் ஒரு அதிசயம் நிறைந்த பழம் என்று சொல்கிறார்கள் ஏனென்றால் உலகில் உள்ள எல்லா பழங்களிலும் விதைகள் மற்றும் கொட்டைகள் பழத்தின் உள்ளே இருக்கும் ஆனால் ஸ்ட்ராபெர்ரியில் மட்டுமே அதனுடைய விதைகள் வெளிப்புறத்தில் இருக்கிறது
இதனுடைய அழகான சிவப்பு நிறம் பார்ப்பவர்களை கவர்ந்து இழுப்பது போல் இருக்கும் இருந்தாலும் இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் மனித உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளையும் வழங்குகிறது
இந்த புளிப்பு சுவையான பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது இது உடலின் நிறத்தை மென்மையாக மாற்றும்
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை சிறுவயதுமுதல் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம் பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி உடல் முழுவதும் சிறந்த ஊட்டச் சத்துக்களை கொடுக்கிறது ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
கிரீன் டீ
டீ வகைகளில் கிரீன் டீ பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது என்று தொலைக்காட்சியில் பல முறை பார்த்திருப்போம் கிரீன் டீயில் சருமத்திற்கான நன்மைகள் பல நிறைந்து உள்ளது இதனை சாப்பிட்டால் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்ச்சியோடு மென்மையாவதோடு தழும்புகள் மறைய ஆரம்பித்து விடும்