சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முதல் 10 உணவு வகைகள்(Top 10 foods to be avoided for kidney patients).!!!
சிறுநீரகம் மனித உடலில் பல வழிகளில் உடலை சமன்படுத்துகிறது மேலும் சிறுநீரகத்தின் பணி என்பது விவரிக்கமுடியாத மிகச் சிக்கலான பணியாக அனைவரின் உடலிலும் அமைகிறது. உடலில் சிறுநீரகம் ரத்தத்தை வடிகட்டுகிறது, கழிவுகளை வெளியேற்றுகிறது, தாதுக்கள் மற்றும் கனிமங்களை சமப்படுத்துகிறது. நமது உடலின் ரத்த ஆரோக்கியத்தை சரி செய்கிறது இதுபோல் பல்வேறு பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் இப்பொழுது இருக்கும் உணவு முறைகளால் அதிக பாதிப்படைகிறது இந்தியாவில் 10ல் 3 நபர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களுக்கு டயாலிசிஸ் என்ற செயற்கையான முறையில் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. மேலும் இதுபோல் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவர்கள் கூறும் பொதுவான உணவு முறைகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொட்டாசியம் அதிகம் நிறைந்த பழங்களை தவிர்க்க வேண்டும்.
அவகோடா, பூசணிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, போன்ற பழங்களில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் பொட்டாசியம் உட்கொள்ளுவதை தவிர்ப்பது நல்லது மேலும் பொட்டாசியம் எந்த வடிவத்திலும் உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உணவை எடுத்துக் கொள்வது நல்லதாக அமையும்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சில நேரங்களில் வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இதுபோன்ற நிலைகளில் பதப்படுத்தப்பட்ட சோடியம் அதிகம் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லதாகும் மேலும் உப்பு மற்றும் சோடியம் குறைவாக சேர்க்கப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லதாக அமையும்.
பொதுவாக அனைவரும் விரும்பும் உணவு.
உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் முதலில் தெரிவிப்பது பிரட், ரொட்டி போன்ற மெலிதான மற்றும் விரைவில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவிப்பார்கள்.
குறிப்பாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகையான கோதுமை ரொட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கோதுமையில் அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது மேலும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது 30 கிராம் கொண்ட இந்த உணவில் 57 மில்லிகிராம் பாஸ்பரஸ் மற்றும் 70 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
நாம் அன்றாட எடுக்கும் அரிசியை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பழுப்பு நிற அரிசியில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. ஒரு கோப்பை அரிசியில் 45 மில்லி கிராம் பாஸ்பரஸ் மற்றும் 58 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழுப்பு நிற அரிசியை தவிர்ப்பது நல்லதாகும். மேலும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரை பெயரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லதாகும்.
வாழைப்பழத்தில் குறைந்த அளவில் சோடியம் இருந்தாலும் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது ஒரு வாழைப்பழத்தில் 422 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது எனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது மேலும் தீவிர பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
எலும்புகளை வலுப்படுத்த வேண்டாம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் எலும்புகளை வலுப்படுத்த அதிக அளவில் பால் பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது பால் பொருட்களில் தனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் இருந்தாலும் கூடவே பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் இருக்கிறது இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பால் பொருட்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி மாற்று வழி.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வைட்டமின் சி எப்பொழுதும் தேவைப்படுகிறது இதற்கு அதிக அளவில் ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் ஆரஞ்சு பழத்தில் 333 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது மற்றும் ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தில் 470 கிராம் மில்லிகிராம் பொட்டாசியம் இருக்கும் இதற்கு பதிலாக ஆப்பிள், கொய்யா பழம், திராட்சை போன்ற பழங்களை தேர்ந்தெடுக்கலாம்.
இறைச்சிகளில் கவனம் தேவை.
21ஆம் நூற்றாண்டில் மக்கள் அதிக அளவில் இறைச்சிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள் குறிப்பாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்ப்பது மேலும் உடல் உபாதைகளை ஏற்படாமல் இருப்பதற்கு வழிவகுக்கும். ஏனென்றால் இறைச்சியில் சுவையை அதிகரிக்க ஏராளமான உப்பு அவற்றில் சேர்க்கப்படுகிறது எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.
நமது பாரம்பரிய உணவு.
நமது பாரம்பரிய உணவில் மசாலா பொருட்களுக்கு முக்கியத்துவம் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது மற்றும் ஊறுகாய் அனைத்து மக்களாலும் உணவில் சேர்க்கப்படுகிறது இதில் சோடியம் என்பது 300 மில்லி கிராம் என்பதை விட அதிக அளவில் உள்ளது.
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி.
நாம் அன்றாடம் செய்யப்படும் உணவில் தவிர்க்க முடியாத பொருளாக தக்காளி உள்ளது ஒரு கப் தக்காளி சாற்றில் 800 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு வருவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது ஒரு நடுத்தர அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 620 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
உருளைக்கிழங்கில் பொட்டாசியத்தின் அளவைக் குறைப்பதற்கு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் குறைந்தது 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
கோழி வளர்ப்பில் அதிக லாபம் தரக்கூடிய வணிகத்தைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.!!!
திரவ வடிவ உணவு வகைகள்.
கருப்பு நிற சோடா, மது, குளிர்பானங்கள், போன்றவற்றை அறவே எடுத்துக்கொள்ளக் கூடாது ஏனென்றால் இதில் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது. உங்கள் உடல் விரைவாக உறிஞ்சப்படும் ஒரு தனிமம் என்றால் அது பாஸ்பரஸ் ஆகும் கூடவே இதுபோன்ற திரவங்கள் மேலும் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் குமட்டல் வாந்தி போன்றவற்றை.twitter