Top 10 Health benefits of drinking water

தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.(Top 10 Health benefits of drinking water)

தண்ணீரின் அருமையை உணர்ந்து வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை எழுதியுள்ளார் இந்த  பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் அவசியமாக தேவைப்படுகிறது மேலும் பால்வெளி மண்டலங்களில் இருக்கும் புதிய கோள்களை ஆராய்ச்சி செய்யும்போது முதலில் தேடப்படுவது  தண்ணீர்  அந்த அளவிற்கு தண்ணீரின் அவசியமாக உள்ளது உயிரினங்கள் வாழ்வதற்கு.

நம் உடலில் இருக்கும் எலும்பில் கூட 22 சதவீதம் அளவிற்கு தண்ணீர் உள்ளது, ரத்தத்தில் 83%, மூளையில் 74%, தசைகளில் 75% தண்ணீர் உள்ளது. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் உயிர் வாழ முடியாது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீர் மனித உடலுக்கு பலவகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

சிறுநீரகங்களுக்கு கான பணியை எளிமைப் படுத்துகிறது.

Top 10 Health benefits of drinking water

உங்கள் உணவில் இருக்கும் கலோரிகள் தனிமங்களை எளிதில் ஜீரணம் செய்ய சரியான அளவில் நீர் தேவைப்படுகிறது மற்றும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் எளிதில் அகற்ற முடியாது நச்சுக்களை வடிகட்ட சிறுநீரகங்களுக்கு நீர் தேவைப்படுகிறது மேலும் மல சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு கடினமான மலத்தை மென்மையாக்குவதன்  மூலம் மலத்தின் இயக்கத்திற்கு நீர் உதவுகிறது..

அரை மணி நேரத்திற்கு முன்பு நீரை பயன்படுத்தலாம்.

நீங்கள் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள விரும்பாவிட்டால் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உணவு எடுத்துக் கொள்ளும் போது அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. இந்தப் பழக்கவழக்கத்தை உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் நபர்கள் பின்பற்றலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Top 10 Health benefits of drinking water

தங்கள் உடலை கட்டுக்கோப்பாக அழகாக வைத்துக்கொள்ள பல இளைஞர்கள் உடற்பயிற்சி நிலையங்களில் கடினமாக பயிற்சி மேற்கொள்கிறார்கள் இது போல் இருக்கும் நபர்கள் போதுமான அளவு தண்ணீர்  குடிப்பதால் உடற்  பயிற்சி செயல்திறனை மேலும் அதிகரிக்க முடியும் மற்றும் தசைகள், மூட்டுகள்,  இணைப்பு திசுக்காளை  சரியாக நகர்த்த நீர்  உதவுகிறது உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரலையும் இதயத்தையும் நல்ல முறையில் இயங்கச் செய்கிறது.

உடல் பருமன் மற்றும் எடை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது.

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தாள் முதலில் நீங்கள் எடுக்கும்   இனிப்பு பானங்களுக்கு பதிலாக நீர் எடுத்துக்கொள்ளலாம் ஏனென்றால் தண்ணீரில் கலோரியின் அளவு பூஜ்யமாக உள்ளது. சர்க்கரை உணவு மற்றும் குளிர்பானங்களை குறைத்துக்கொண்டு சரியான அளவில் நீர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள ஒட்டுமொத்த கலோரியின் அளவை நீர் கவனித்துக் கொள்கிறது.

நோய்கள் வராமல் தடுக்கிறது.

உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் இருந்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் சருமம் முடி பிரச்சனை போன்றவைகள் ஏற்படும் உடலில் நோய் தோன்றுவதற்கு முதல் அடிப்படையான விஷயம் என்றால் உடல் வெப்பநிலை தான் சரியான முறையில் உங்களால் கவனிக்க முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உங்கள் உடல் மோசமான நிலைக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேலாக நீரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் வறட்சி ஏற்பட்டு தலைவலி, சோர்வு, சரியான பார்வை இல்லாமல், பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் மேலும் மூளையின் செயல்பாடுகளை ஆதிகரிக்க  தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் மூளையில் 74 சதவீதம் அளவிற்கு நீர் உள்ளது.

அழகான சருமத்திற்கு தண்ணீரின் பங்கு.

Top 10 Health benefits of drinking water

உடலில் அதிகப்படியான அழுக்குகள் இருந்தால் அதை வெளியேற்றுவதற்கு முகப்பருக்கள் மற்றும் முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வடிதல் போன்றவை ஏற்படும் எனவே  இதுபோல் அழுக்குகள் ஏற்படாமல் இருப்பதற்கு தண்ணீரை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

https://twitter.com/liveintamilnadu  உடல் எடையைத் தவிர்க்க 5 சிறந்த வழிகள்.!!!

ஒரு நாளைக்கு மனித உடலுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு.

Top 10 Health benefits of drinking water

நாம் டிவிகளில் விளம்பரங்களில் வரும் நிகழ்ச்சிகள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற  அறிவுரையை கேட்டிருப்போம் ஆனால் அது உண்மை இல்லை உங்கள் உடல் எடை வயது போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் உடலுக்கு தண்ணீரின் எடுத்துக்கொள்ளும் அளவு மாறுபடும்.

குளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்கள் அல்லது ஏசி அறையில் வேலை செய்யும் நபர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் உடற் பயிற்சி செய்யும் நபர்கள் அதிகப்படியாகா  வெளிப்புறம் வேலை செய்யும் நபர்கள் 2 லிட்டருக்கு மேல் எடுத்துக்கொள்ளலாம்.

Best 5 agriculture business ideas சிறந்த 5 விவசாய வணிக யோசனைகள்.!!!

நாம் தினமும் எடுத்துக்கொள்ளும்  காபி தேநீர் பால் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றிலிருந்து நீர் பெறுகிறோம் இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் உங்களுக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடித்தால் போதும்.twitter

Leave a Comment