top 10 Nethili meen amazing health benefits

Top 10 Nethili meen amazing health benefits

வாரத்தில் ஒரு நாள் இந்த மீனை சாப்பிட்டால் நோய்கள் எல்லாம் பறந்து போகும்.

நீங்கள் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது, என்றாலும் கூட நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம்.

அசைவ உணவு என்று வரும்போது நாம் பெரும்பாலும் சாப்பிடுவது கோழி, ஆடு, போன்றவற்றின் இறைச்சியைத் தான் இவற்றை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

மீன் என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச் சுவையான உணவாக இருக்கிறது, அதிலும் ஆரோக்கியமான மற்றும் கடலில் பிடிக்கப்பட்ட மீன் என்றால் அதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகம் வரும் எந்த மீனில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

இந்த மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான் இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறை கூற முடியாது.

இது சுவையில் அலாதியானது, நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் தரமான மீனை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும் முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

Top 10 Nethili meen amazing health benefits

இணைப்பு திசுக்களின்வளர்ச்சிக்கு

செல்லுலார் மற்றும் இணைப்புத் திசுக்களின் வளர்ச்சிக்கும் இந்த திசுக்களின் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரதச்சத்து நெத்திலி மீனில் நிறைந்துள்ளது.

இதய ஆரோக்கியம்

நெத்திலி மீனில் பாலி-அன்சாச்சுரேட்டேடு, ஃபேட்டி அமிலம், அதிகம் நிறைந்துள்ளது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எப்படி எனில் இந்த மீனை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

சரும ஆரோக்கியம்

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், மக்னீசியம், துத்தநாகம், இரும்பு, போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு சருமம் பொலிவாக இருக்கும்.

பற்கள் மற்றும் எலும்புகள்

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது, இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

கண் ஆரோக்கியம்

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது, எனவே இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சனைகளை தடுக்கலாம்.

உடல் எடை குறைய

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரதச்சத்து அதிகம் என்பதால் இது உடல் எடையைக் குறைக்க வழி வகை செய்யும்.

நினைவாற்றல்

மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் நினைவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்க்க வழிவகை செய்யும்.

மூளை வளர்ச்சிக்கு

மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவுகிறது.

கெட்ட கொழுப்புகளை தடுக்க

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவை குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது மேலும் இரத்தக்குழாயின் நீட்சி தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது

மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம், மற்றும் புரோஸ்டேட், ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 60 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

இரத்த அணுக்களை அதிகரிக்கிறது

மீன்களில் அதிக அளவு நிறைந்துள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும் இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும் மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நொதிகளின்வினை தீர்க்கும், அயோடின் ஆனது முன் கழுத்துக் கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவு உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்கள் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம், தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், கூட மீன் உணவை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா என்பது குழந்தைகளைத் தாக்கும் பிரச்சனைகளில் ஒன்று மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

மன அழுத்தம் குறைய

மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.

தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்பு தேய்வு, சொறி, சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால், ஏற்படும் நோய்கள் போன்றவற்றை குறைக்க வழிவகை செய்கிறது.

மத்தி மீன் நன்மைகள்

மத்தி மீனில் இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு வைட்டமின்கள் தாது சத்துக்கள் நிறைந்துள்ளது, 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது.

மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்துள்ளதால், ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைத்து, இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

தோல் நோய், மூளை, ஆஸ்துமா நோய்கள், வயதானவர்களுக்கு, ஏற்படும் மன அழுத்தம், முடி உதிர்தல், ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

வைட்டமின் டி ஊட்டச்சத்து

மத்தி மீனில் வைட்டமின் டி என்ற ஊட்டச் சத்து நிறைந்துள்ளது, இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது, மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

சர்க்கரை நோய்க்கு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

மத்தி மீன்களில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது, மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

மத்தி மீனில் வைட்டமின் பி12 உள்ளதால் இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு வருவதை தடுக்கிறது.

Top 10 Nethili meen amazing health benefits

கால்சியம் மாத்திரைகள் தயாரிக்க

மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது, மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரையை சாப்பிடுபவர்கள் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாகும், இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாகற்காயில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா

சரியான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி

கண்கள் பளபளப்பாகவும் குழி விழாமலும் குவிந்து காணப்படும்.

செவுள்கள் இரத்த சிவப்பாக காணப்படும்

மீனின் வயிற்றுப் பகுதியில் வீக்கம் இருக்காது

மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்

தசைப்பகுதி உறுதியாக இருக்கும்

கடல் பாசி மணம் இருக்கும்

10 amazing benefits of cinnamon water in tamil

அழுகிய மீனை கண்டுபிடிப்பது எப்படி

மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்

விரும்பத்தகாத அழுகிய முட்டை மனம் அல்லது அம்மோனியம் அல்லது கழிவு பொருட்களில் வாடை வீசும்.

மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி வெள்ளை நிறத்தில் காணப்படும்.

செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் காணப்படும்.

 

Leave a Comment