Top 10 plants provide pure oxygen in tamil
உங்கள் வீட்டினுள் சுத்தமான ஆக்சிஜனை அதிகமாக அள்ளித்தரும் செடி வகைகள்..!
இன்றைய சூழ்நிலையில் நமது சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் காற்றின் தூய்மை மோசமடைந்து வருகிறது.
இவ்வாறு காற்று மாசுபட்டு வருவதால் ஆஸ்துமா, சைனஸ், மூச்சுக் குழாய் பாதிப்பு, அலர்ஜி, மூச்சுவிடுவதில் பலவகையான உடல் உபாதைகளை,லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
உலக சுகாதார மையம் இதனை மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையை அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
காற்று மாசடைவது என்பது இந்த உலகத்திற்கு மிகப்பெரிய ஒரு தீங்கு விளைவாக இருக்கிறது.
இதனால் மனிதன் மற்றும் காட்டில் வாழும் பறவை இனங்கள், விலங்கினங்கள், கடல்வாழ் உயிரினங்கள், என அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய ஒரு ஆபத்து நடந்து கொண்டிருக்கிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் உள்ள சுற்றுச்சூழல் தன்மைக்கேற்ப புதிய புதிய சட்டங்களை அமல்படுத்தி கொண்டு இருக்கிறது சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கு.
தற்போது உள்ள சுற்றுப்புற சூழலில் உங்கள் சுற்றுப்புற சீர்கேட்டை தவிர்க்க முடியாது மேலும் துகல்களை சுவாசிப்பதில் இருந்தும் தப்பிக்க முடியாது.
எனவே உங்களது வீடுகளில் பசுமையான தாவரங்களை வளர்த்து வந்தால் உங்களால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் வீடுகளில் வளர்க்கும் தாவரங்கள் நமக்கு போதுமான அளவு சுத்தமான காற்றை வழங்குகிறது.
அதோடு நமக்கு மன ஆரோக்கியத்தையும் வழங்கி நம் அமைதியோடு வாழ்வதற்கு உதவி செய்கிறது.
அரசு மற்றும் சுகாதார அமைச்சகம் போன்ற அமைப்புகள் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கு பல்வேறு வகையான புதிய புதிய முயற்சிகளை முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும் சுற்றுப்புற சூழலை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
கற்றாழை (Aloe Vera)
கற்றாழை செடியானது ஒரு வற்றாத சதைப்பற்றுள்ள தாவரமாக இருக்கிறது, கற்றாழை நமது தோலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது.
இந்த கற்றாழை செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துக்கள், இருப்பதால் இது ஒரு மூலிகை தாவரமாக பழங்காலம் முதல் கருதப்படுகிறது.
அழும் அத்தி (Weeping Fig)
அத்தி என்றழைக்கப்படும் தாவரம் அழும் அத்தி என்று பழங்கால முதல் அழைக்கப்படுகிறது காற்றை சுத்தம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தாவரமாக இந்த உலகில் இது இருக்கிறது, பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் இந்த தாவரம் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
காற்றை சுத்திகரிப்பதில் தலைசிறந்த தாவரம் அழும் அத்தி ஆகும் அதனாலதான் அது காற்றில் உள்ள ஃபார்மால்டிகைட்,சைலின், மற்றும் டோலூயின் போன்ற நச்சுகளை அகற்றி காற்றை சுத்தப்படுத்துகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கிறது இந்தத் தாவரத்தை, அதனால் அத்தியை உங்களது வீடுகளில் வளர்த்தால்.
உங்கள் வீடுகளில் உள்ள காற்றை சுத்திகரிக்கும், சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை சுவாசிப்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
அரிகா பாம் (Areca Palm)
வீட்டில் உள்ள காற்றைச் சுத்திகரிக்கும் தாவர வகைகளில் அரிகா பாம் தாவரமும் சிறந்ததாக இருக்கிறது, இது காற்றில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகிறது.
இது காற்றை சுத்திகரிப்பதோடு நின்றுவிடாமல், குழந்தைகள் மற்றும் கருவில் வளரும் சிசுக்கள் போன்றவற்றையும் ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது.
அரிகா பாம் தாவரத்தை உங்கள் வீடுகளில் வளர்த்து வந்தால் உங்களது நரம்பியல் அமைப்பை கனகச்சிதமாக பலப்படுத்தும்.
ஸ்பைடர் செடி (Spider Plant)
வீடுகளில் மிக எளிதாக வேகமாக வளரக்கூடிய செடி வகைகளில் ஸ்பைடர் செடியும் ஒன்று காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு,ஃபார்மால்டிகைட் மற்றும் பென்சீன் போன்ற நச்சுகளை அகற்றிவிடுகிறது.
இதனால் காற்றின் தரம் உயர்ந்துவிடுகிறது மேலும் இது அதிகமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது, அதோடு இந்த செடியானது வீட்டிற்குள் மகிழ்ச்சியான அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
அதனாலதான் வீட்டில் இருப்பவர்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை நீங்கி நிம்மதியாக வாழலாம் இந்த செடியை வளர்த்தால்.
போத்தோஸ் செடி (Pothos Plant)
போத்தோஸ் செடியானது ஒரு அழகான பசுமையான செடியாக இருக்கிறது, இதனை நீங்கள் வீட்டில் வளர்த்தால் உங்களது வீட்டின் அழகு தனித்துவமாக இருக்கும்.
போத்தோஸ் செடியை வளர்ப்பது மிகவும் எளிது இந்த செடியானது வீட்டில் உள்ள காற்றில் கலந்திருக்கும் மாசுகளை அகற்ற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
அதுமட்டுமில்லாமல் காற்றிலுள்ள ஃபார்மால்டிகைட், பென்சின், மற்றும் கார்பன் மோனாக்சைடு, போன்ற நச்சுகளை அகற்றி விடுகிறது.
மேலும் இரவு நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான அளவில் ஆக்சிஜனை வெளியிடுகிறது ஒரு அற்புதமான செடியாகும்.
பாம்பு செடி (Snake plant )
பாம்பு செடியை பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், இது காற்றில் உள்ள நச்சுகளை நீக்கிவிடுகிறது.
பாம்பு செடியானது காற்றில் உள்ள நைட்ரஜன் ஆக்சைடு,பென்சின்,சைலீன் மற்றும் ஃபார்மால்டிகைட் போன்றவற்றை உறிஞ்சிவிடும் என்று நாசாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் உங்களது அறைக்குள் அதிக அளவு ஆக்சிஜனை வழங்குவதோடு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி விடுகிறது இந்த தாவரம்.
துளசி (Basil)
இந்திய குடும்பங்களில் துளசி செடியானது தெய்வீகம் நிறைந்த ஒரு செடியாக பண்டைய காலம் முதல் கருதப்படுகிறது.
துளசி செடியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது, துளசியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வீட்டிற்குள் ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், உங்களால் கொண்டுவர முடியும்.
துளசியானது தீமையிலிருந்து வீட்டை பாதுகாக்கும் என்று நம்முடைய பண்டைய மரபியலில் சொல்லப்பட்டுள்ளது.
ஆன்மீக நன்மைகளை தவிர்த்து துளசியானது மூலிகைகளின் ராணி என்று சொல்லப்படுகிறது, ஏனெனில் இது ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.
துளசியை வீட்டில் வளர்த்துவந்தால் அது ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் ஏனெனில் ஒருநாளில் 20 மணிநேரம் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
மேலும் காற்றில் இருக்கும் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு, போன்றவற்றை உறிஞ்சிவிடுகிறது.
மூங்கில் செடி (Bamboo plant)
மூங்கில் செடியானது காற்றில் உள்ள டோலுயின் என்ற நச்சு அகற்றி விடுகிறது இந்த டோலுயின் ஒரு நிறமற்ற திரவம்மாகும் இதன் வாசனை நெடி ஏற்படுத்தும்.
அதோடு மூக்கு மற்றும் தொண்டை ஆகிய உறுப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தி விடும், மூங்கில் செடியானது இந்த நச்சு அகற்றுவதன் மூலம் நீங்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும்.
அடுத்ததாக வளிமண்டலத்தில் இருக்கும் பென்சீன் மற்றும் ஃபார்மால்டிகைட் போன்ற நச்சுக்களையும் மூங்கில் செடியானது வடிகட்டி விடுகிறது, மூங்கில் செடியை வீட்டில் வளர்த்தால் அதிக அளவிலான தூய்மையான ஆக்சிஜனை உங்களால் பெற முடியும்.
கெர்பெர டெய்சி (Gerbera Daisy)
கெர்பெர டெய்சி செடியில் நல்ல நிறமுள்ள பூக்கள் இருக்கும் அதோடு வீடு மிகவும் அழகாக தோற்றமளிக்கும், இந்த செடியை உங்கள் வீட்டில் வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜனை வழங்கும்.
தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டங்கள்
மேலும் காற்றில் உள்ள நச்சுக்கள்யானா பென்சின்,சைலீன் மற்றும் ஃபார்மால்டிகைட் போன்றவற்றை நீக்கி விடுகிறது என்று நாசா வெளியிட்டு இருக்கிறது.
இந்த செடியானது இரவு நேரத்தில் அதிகமான ஆக்ஸிஜனை வழங்குகிறது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி விடுகிறது பொதுவாக உங்கள் வெளிப்புறங்களில் சுவாசிக்கும் காற்றை ஒன்றும் செய்ய முடியாது.
How to use PAN and Aadhar card safety 2022
ஆனால் வீடுகளில் செடிகளை நீங்கள் வளர்த்து வந்தால் தரமான சுத்தமான அதிகமான ஆக்ஸிஜனை உடல் பெற முடியும்.