புரதச் சத்து நிறைந்துள்ள 10 இயற்கையான உணவுகள். உடல் எடை அதிகரிப்பதற்கு(top 10 protein foods increasing body weight)
இன்றைய உலகத்தில் இணையத்தில் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதை அதிகமான மக்கள் தேடுகிறார்கள் காரணம் சீரற்ற உணவு பழக்க வழக்கத்தால் உடல் எடையானது வேகமாக அதிகரிக்கிறது.
மன அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் ,அதிக தூக்கமின்மை சில காரணங்களால் உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் அதிகமாக சேர்ந்துவிடுகிறது இதன் காரணமாக உடல் எடை படுவேகமாக அதிகரிக்கிறது.
இதனை எப்படி குறைக்க வேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் அதிகமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள் அதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பல சிகிச்சைகள் பரிந்துரைத்தாலும் அவைகள் பயன் படுவதில்லை காரணம் இயற்கையான முறையில் ஏதோ ஒன்றை செய்தால் மட்டுமே நமது உடல் அதை வேகமாக எடுத்துக்கொள்கிறது.
இயற்கையான முறையில் பின்வரும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு (Sugar beet)

சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்பது ஒரு வகையான வேர் காய்கறியாகும் . சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது ஆனால் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளது இதனை நீங்கள் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
நீங்கள் சாப்பிட கூடிய ஒவ்வொரு சர்க்கரைவள்ளிக்கிழங்கு 8 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 6 கிராம் இயற்கையான சர்க்கரை உள்ளது இவை உடல் நலத்திற்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
மேலும் ஒரு சர்க்கரைவள்ளி கிழங்கில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது இது உங்களுடைய செரிமான அமைப்பை இயற்கையாக இயங்க வைக்க உதவுகிறது.
அவகோடா பழம் (Avocado fruit).

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பதற்கு இந்த பழம் முக்கிய பங்கு அளிக்கிறது நமது உடலில்.
இந்த பழத்தில் 73 % நீர், 15% கொழுப்பு, 8.5 % கார்போஹைட்ரேட் மற்றும் 4% புரதம் உள்ளது.
ஒரு சிறிய அவகோடா பழத்தில் 100 கிராம் கலோரிகள் உள்ளது.
வேர்கடலை (Peanuts).

வேர்க்கடலையில் இருக்கும் கலோரிகளில் சுமார் (22-30)% புரதச் சத்துக்கள் உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது வேர்கடலை.
மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இயற்கையாகவே வேர்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகிறது.
பாலாடைக்கட்டி (Cheese)

சைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு பாலாடைக்கட்டி ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம் ஏனெனில் இதில் கரைகின்ற புரதச்சத்து நிறைந்துள்ளது.
பாலாடைக்கட்டி உணவில் எடுத்துக்கொண்டால் போதுமான அளவு கலோரிகள் கிடைக்கும் மற்றும் உடல் எடை அதிகரிக்க தொடங்கும் விரைவில்.
இறால் (Shrimp).

உங்களுக்கு கடல் உணவு அதிகமாக பிடிக்குமா அப்படி என்றால் இந்த இறால் உணவை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் நிறைந்துள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து கலோரிகளையும் கொடுப்பது மட்டுமில்லாமல் கலோரிகளை உடலில் தங்க வைக்கிறது இதனால் உங்கள் எடை அதிகரிக்க தொடங்கும்.
மாட்டிறைச்சி (Beef).

மாட்டிறைச்சியில் இருக்கும் கொழுப்புகள் சுலபமாக உடலில் கலப்பதால் உடல் எடை அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
மாட்டிறைச்சியில் உயர்தர புரதச்சத்து நிறைந்துள்ளது மேலும் அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளதால் இது ஒரு முழுமையான புரதமாக கருதப்படுகிறது.
சால் மீன்(Sal fish).

சால்மன் மீனில் உயர்தரமான புரதம், ஒமேகா-3,பொட்டாசியம், வைட்டமின் பி2, இரும்புச் சத்து, உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மீன்களை உணவில் எடுத்துக்கொண்டால் புரதச்சத்து மற்றும் மீனில் இருக்கும் இன்றியமையாத எண்ணெய்கல் உங்களை புத்துணர்ச்சியாக எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கும் மேலும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை கொடுக்கும்.
சூரை மீன் (Tuna fish).

100 கிராம் சூரை மீனில் 28 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்த மீன் ஒமேகா-3, போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சக்தியாகும்.
இது நமது உடலுக்கு இதயம் ஆரோக்கியம் முதல் அழகான தோல் வரை பல நன்மைகளை கொடுக்கிறது.
சூரை மீன் ஒரு தனித்துவமான சுவை கொண்ட பிரபலமான உப்பு நீர் மீன்.
முட்டை (Egg).

உங்களுக்கு உடல் எடையை விரைவாக அதிகரிக்க வேண்டும் என்றால் தினமும் 2 முதல் 4 முட்டைகள் எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் இதில் வளமான புரதச்சத்து அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளது.
மேலும் முட்டை மஞ்சள் கருவில் நல்ல கொழுப்பிணியும் ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது.
பாதாம் (Almonds).

ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த நட்ஸ் வகைகளில் பாதாம் முதன்மையாக உள்ளது. புரதச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், வைட்டமின் ஈ,ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் அதிக அளவில் உள்ளது.
பாதாமை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் முடி உதிர்வு மற்றும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் மேலும் உடல் எடை அதிகரிப்பதற்கு இது உதவுகிறது.
10 habits of highly successful people in Tamil
சிவப்பு இறைச்சி (Red meat).

சிவப்பு இறைச்சியில் இருக்கும் இரும்புச்சத்து உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.
சிவப்பு இறைச்சியில் இருக்கும் வைட்டமின் பி-12 உடலில் புதிய டிஎன்ஏ வை உருவாக்க உதவுகிறது.
நரம்பு மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மேலும் துத்தநாகம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சரியாக இயங்க வைக்கிறது.
சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்க வேண்டிய 5 விட்டமின்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிவப்பு இறைச்சி அதிக அளவில் புரதத்தை வழங்குகிறது உடலுக்கு இதனால் எலும்பு மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது
Telegram group | Click Hear |
YouTube | Click Hear |