Top 3 States petrol tax details useful tips
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா? அதிகமாக வரி வசூலிக்க மாநிலங்கள் எது..!
இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் வேகமாக வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் அதிகப்படியான பெட்ரோல் டீசல் விலையை குறைக்க.
மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில அரசுகளை, கூட்டுறவு கூட்டாட்சி என் உணர்வில் எரிபொருள் விலை மீதான.
வாட் வரியை குறைக்குமாறு சில மாநிலங்களில் வலியுறுத்தியது, இந்தியாவில் மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது.
எந்த மாநிலம் எவ்வளவு வரி வசூலிக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்தியன் ஆயில் தரவுகள் படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 56.32 ரூபாய் சரக்கு போக்குவரத்து கட்டணமாக லிட்டருக்கு 0.20 ரூபாய் விதிக்கப்படுகிறது.
இதன் மூலம் டீலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலை 56.52 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது, இதன் பின்புதான் மத்திய மாநில அரசுகள் வரி அமலுக்கு வருகிறது.
டெல்லியில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 105.41 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டருக்கு 45.03 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது அதிகமாக இது ஒரு மாநிலத்திலும் போக்குவரத்து தொலைவு மற்றும் மாநில அரசுகளின் மாறுபட்ட வரிவிதிப்பின் மூலம் மாறுபடும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெட்ரோல் விலை மாறுபடுகிறது.
தமிழ்நாட்டில் என்ன நிலவரம்
Top 3 States petrol tax அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 48.6 ரூபாய் வரியை மக்கள் செல்கிறார்கள் இந்த 48.6 ரூபாய் என்பது மத்திய மாநில அரசு விதிக்கும் வரி மட்டும்.
இதில் டீலர் கமிஷன் போக்குவரத்து கட்டணம் ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, இதன் மூலமே தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை என்பது அதிகப்படியாக இருக்கிறது.
முதலில் இருக்கும் 3 மாநிலங்கள்
Top 3 States petrol tax இதுவே மகாராஷ்டிராவில் 52.5 ரூபாய்,ஆந்திரப் பிரதேசத்தில் 52.4 ரூபாய் தெலுங்கானாவில் 51.6 ரூபாய் விதிக்கப்பட்டு இந்தியாவில் பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் முதல் மூன்று மாநிலங்களாக இவைகள் உள்ளது.
பிற மாநிலங்களின் நிலை என்ன
கர்நாடகாவில் 48.1 ரூபாய்
கேரளாவில் 50.2 ரூபாய்
புதுச்சேரி 42.9 ரூபாய்
குஜராத்தில் 44.5 ரூபாய்
உத்திரப்பிரதேசத்தில் 45.2 ரூபாய்
ஜம்மு-காஷ்மீரில் 45.9 ரூபாய்
பஞ்சாபில் 44.6 ரூபாய்
மேற்குவங்காளத்தில் 48.7 ரூபாய்
வரி வசூலிக்கப்படுகிறது.