top 4 symptoms of weak immune system
இதுபோல் அறிகுறிகள் நீங்கள் உணர்ந்தால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் ஆபத்தில் இருக்கிறது(top 4 symptoms of weak immune system)
வைரஸ் பாக்டீரியா பூஞ்சை அல்லது புரோட்டோசோவன் தாக்குதலிலிருந்து உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் தான் உடலை கவசம் போல் பாதுகாக்கிறது.
சமீபகாலங்களில் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எண்ணற்ற மக்களை பாதுகாத்து கொள்வது வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமே கொரோனா தாக்கியாவர்களையும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தான் மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ளது
ஒரு தீங்கு இழைக்கும் வைரஸ் புதிதாக மனித உடலில் நுழையும் பொழுது அல்லது ஏற்கனவே நோய்களை ஏற்படுத்திய வைரஸ் மறுபடியும் உடலில் நுழையும் பொழுது நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கு விளைவிக்கும் நோய் கிருமிகளை அடையாளம் கண்டு அவற்றைத் தாக்கி அழிக்கிறது
இதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு வலிமையாகிறது நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப் பட்டிருந்தால் அல்லது சோர்வாக உணர்ந்து இருந்தால் அதற்கு உங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு காரணமாக இருக்கலாம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்
தொடர்ச்சியாக வயிறு சம்பந்தமான கோளாறுகள்
மனித உடலில் கிட்டத்தட்ட 70% நோயெதிர்ப்பு மண்டலம் குடலில் உள்ளது குடல் பாக்டீரியா நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் இந்த குடல் பாக்டீரியாக்கள் டி-செல்கள் அல்லது இராணுவ செல்கள் வளர்ச்சியை உடலில் தூண்டுகிறது.
சுய மற்றும் சுய அல்லாத செல்கள் மற்றும் திசுக்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது இந்த சிம்பியாடிக்கு பாக்டீரியாக்களின் குறைந்த அளவு வைரஸ்கள் நாள்பட்ட அலர்ஜி மற்றும் தன்னுடல் தாக்க கோளாறுகளில் அபாயத்தை அதிகரிக்கும் இதன் காரணமாக உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது வாயுத்தொல்லை அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கும்
காயங்கள் குணமாவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்
நோயெதிர்ப்பு அமைப்பு தான் நோய்த் தொற்றுக்களை தடுக்க காயத்தை வீக்கம்மாக்குகிறது இதனால் காயத்தின் மீது புதிய செல்கள் உருவாக அனுமதிக்கிறது மற்றும் காயத்தை குணப்படுத்த வடுக்களை உருவாக்குகிறது.
உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் போதுமான ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் புதிய செல்கள் உருவாக்கம் செய்வதை இது கட்டுப்படுத்தும் இதனால் உங்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் குணமாவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்
எப்பொழுதும் சோர்வு
சரியான தூக்கத்திற்கு பிறகும் நீங்கள் சொல்ல முடியாத சோர்வு மற்றும் களைப்புகளை அனுபவிக்கிறீர்கள் என்றால் அது நிச்சயமாக கடுமையான ஒரு அறிகுறி அது உங்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பதை குறிக்கிறது
நோய் எதிர்ப்பு அமைப்பு உடலில் ஆற்றல் மட்டத்திற்கு நேரெதிராக இருப்பதால் நோய் கிருமிகள் உடனான சண்டையின் போது நோய் எதிர்ப்பு சக்தியை எரி பொருளாக மாற்றுவதற்கு உடல் ஆற்றலை பாதுகாக்க முயற்சிக்கிறது என்பதை இது குறிக்கும்
அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது
ஆராய்ச்சியின் படி பெரியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சளி பிடிக்கிறது ஆனால் உங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால் அது உங்கள் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை தெளிவாக்குகிறது
இது உங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் சுகாதார பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம் நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டு இருந்தாள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்களை நேரடியாக பாதிக்கிறது இந்த புகைப்பிடிக்கும் பழக்கம்
மனித உடலுக்கு தேவையான காப்பர் சத்து நிறைந்துள்ள சிறந்த 10 உணவு வகைகள்
சுவாசக்குழாயின் சிறிய சிறிய முடிகளுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் மேலும் இது பொதுவாக கிருமிகளைக் கொண்டு செல்லும் சளி மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுதல்
ஒருவர் அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது உடலில் கார்டீகோஸ்டீராய்டுகளை வெளியிடப்படுகிறது இது மனித உடலில் உள்ள லிம்போசைட்டுகள் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறனை பாதிக்கிறது மன அழுத்தம் மற்றும் பதற்றம் நடத்தை புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற நடைமுறைகளுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இழப்பு ஏற்படும்