உங்கள் நுரையீரலை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.!!!(top 5 amazing tips keep your lungs healthy)
காற்று மாசுபாடு காரணமாக ஏராளமான பிரச்சனைகளை உயிரினங்கள் சந்திக்கின்றன. காற்று மாசுபாட்டை குறைக்க இந்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் இணைந்து பல்வேறு சட்டத் திருத்தங்களை இந்தியாவில் கொண்டு வந்துள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோமொபைல் துறையில் பாரத் ஸ்டேஜ் என்ற சட்டத்தை அமல்படுத்தி உள்ளது இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகனங்களின் உமிழும் தரத்தை உயர்த்த வேண்டும்.
கொரோனா வைரஸ் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் தாக்குகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனை கட்டுப்படுத்த சில உணவு முறைகளை பின்பற்றினால் போதும்.
கிரீன் டீ.
பொதுவாக கிரீன் டீயை உடல் எடையை குறைப்பதற்கு அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கிரீன் டீயில் உள்ள கனிமங்கள் நுரையீரல் பிரச்சனையை சிறந்த முறையில் குணப்படுத்துகிறது காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளில் கிரீன் டீயை எடுத்துக் கொண்டால் போதும்.
பூண்டு.
மனிதகுல இனத்திற்கு பூண்டு ஒரு வரப்பிரசாதமாகும் பூண்டில் அல்லிசின் என்ற சக்தி வகை கலவை உள்ளது. இது ஒரு ஆன்டிபயாட்டிக் பொருளாக நமது உடலில் செயல்படுகிறது நோய்த் தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது இது நெரிசல் மற்றும் மூச்சுத் திணறலை போக்க மேலும் வீக்கம் மற்றும் நுரையீரல் புற்று நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
மஞ்சள்.
அனைத்து உணவுப் பொருட்களிலும் சரியான அளவில் மஞ்சள் சேர்த்துக் கொண்டால் உடலை நச்சுத்தன்மை நெருங்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள கலவை இயற்கையாகவே நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. சுவாச நோய்களால் ஏற்படும் வீக்கம் மற்றும் நெரிசலை இது குறைக்கிறது.
தேன்.
சுத்தமான தேன் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் எளிதாக குணப்படுத்தி விடும். மேலும் தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த உதவுகிறது. உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் உங்கள் நுரையீரலை சுத்தப்படுத்த மிகவும் பயன்படும் மேலும் சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது.
இஞ்சி.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பார்த்துக் கொள்ள அதிக அளவில் இஞ்சியை வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு செய்தி 2 மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது இதில் இருக்கும் அனைத்து விஷயங்களும் உண்மை இருமல் மற்றும் சளியை குணப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியங்களில் இஞ்சி முதன்மையாக உள்ளது.
இஞ்சியில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன இவை அனைத்தும் நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
சிறந்த 7 உணவுகள் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
பயிற்சிகள் தேவைப்படுகிறது.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம் ,யோகா ,போன்ற பயிற்சிகள் உங்களுக்கு உதவும். நுரையீரல் நோய் இருந்தாலும் எளிதாக குணமாகும் உங்கள் நுரையீரல் திறனை அதிகரிக்க பயிற்சி செய்யுங்கள். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உங்கள் வீட்டைச் சுற்றி மூலிகை மரங்களை வளருங்கள்.twitter