இந்தியாவில் எப்பொழுதும் சிறப்பாக செயல்படும் சிறந்த 5 முதலீட்டுத் திட்டங்களைப் பற்றியும் பார்ப்போம் (Top 5 investment plan in India.)
சேமிப்பின் அவசியம் என்பதை அனைவரும் கண்டிப்பாக உணர்ந்துள்ளோம் இந்த 2020ம் ஆண்டு மேலும் வரும் காலத்திற்க்கு எப்படி எந்த துறையில் சேமித்தால் நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் அதற்க்கு சரியான வட்டி விகிதம் கிடைக்கும் என்பதை கண்டிபாக தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அனைவரும்.
மாத சம்பளம்,சுயதொழில்செய்யும் நபர்களுக்கு,மாதத்தின் பாதி நாட்களுக்கு பணப்பிரச்சனைகள் இருந்துக்கொண்டே இருக்கும்.நம்முடைய பண பிரச்சனைக்கு சேமிப்பு என்பது சில நேரங்களில் சரியான தீர்வாக அமைகிறது.
பொருளாதரம், வேலை வாய்ப்பு, சரியாக இல்லாத இந்த காலகட்டங்களில் சரியான முறையில் சரியான திட்டத்தில் சேமிப்பை நாம் உருவாக்கினால் எதிர்காலத்தில் நாம் சில நேரங்களில் பாதுகாப்பாக உணர்வோம்.
எப்பொழுதும் கை கொடுக்கும் தங்கம்.( Gold Investment)
நம்முடைய கலாசரத்தில் தங்கத்திற்க்கு நம் முன்னோர்கள் அதிக முக்கியத்துவதை கொடுத்துள்ளார்கள்.2020ம் ஆண்டு ஊரடங்கு உத்தரவின் போது தங்கத்தின் விலை உச்ச கட்டத்தை தொட்டதை நாம் பார்த்துள்ளோம் காரணம் தங்கம் சிறந்த முதலிடகவும் பாதுகாப்பு புகலிடமாகவும் இந்த உலகில் இருக்கிறது.
நாம் தங்கம் வாங்கும் போது செய்கூலி சேதரத்தினால் விலை சற்று உயரும் இதனால் மாற்று வழியில் முதலீடு செய்யலாம்.பேப்பர் என்றழைக்கப்படும் தங்க பத்திரம், தங்கம் சார்ந்த பண்டுகள், காமட்டிட்டி சந்தை,உள்ளிட்ட வழிகளில் நீங்கள் எளிதாக முதலீடு செய்யலாம் மற்றும் நீங்கள் விற்க்க வேண்டும் என முடிவு செய்தால் அன்றைய சந்தை விலைக்கு விற்பனை செய்யலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் சிறப்பாக அமையும்.( National Pension Scheme)
வயதானவர்களை பாதுகாக்கவும் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நமது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அதில் தேசிய ஓய்வூதிய திட்டம் அனைத்து தரப்பினர்க்கும் சரியாக அமையும்.நாட்டு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை எற்படுத்த அரசு இது போல் பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்துகிறது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்யும் நபர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், என அனைவருமே இந்த திட்டத்தில் இணைந்துக்கொள்ள முடியும். மேலும் 1,000 ரூபாய் முதல் இதில் முதலிடு செய்யும் வசதினை எற்பாடு செய்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
டெர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன.( Term Insurance)?
இந்த திட்டத்தைப் பற்றி கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்னென்றால் இந்தியாவில் இருக்கும் மக்கள் அதிக அளவில் உடல் உபாதைகளுக்கு செலவு செய்கிறார்கள். டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் சிறந்த முதலிட்டு திட்டமாக உள்ளது இதில் நீங்கள் 500 ரூபாய் முதல் முதலிடு செய்யலாம் மேலும் ஒரு கோடி வரை க்ளைம் செய்துக் கொள்ள முடியும்.ஒரு வேளை பாலிசிதாரருக்கு எதாவது நேர்ந்தால் அவர்களுடைய குடும்பத்திற்க்கு இந்த திட்டம் கை கொடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் என்ற சிறந்த முதலீடு உங்களுக்கு.( Real Estate)
2020ம் ஆண்டு ரியல் எஸ்டேட் என்பது முடங்கிய தொழிலாக உள்ளது ஆனால் விலை குறையவில்லை தினமும் அதிகரிக்கிறது உங்கள் கையில் உபரி பணம் இருந்தால் கண்னை முடிக்கொண்டு இந்த துறையில் நீங்கள் முதலிடு செய்யலாம் என்னென்றால் இந்த துறைக்கு வரும் காலங்களில் சிறப்பாக இருக்கும் மார்க்கெட்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.( Public Provident Fund Scheme)
நீங்கள் நீண்ட காலத்திற்க்கு முதலிடு செய்ய முடிவு செய்தால் அதற்க்கு சரியான திட்டம் இந்த திட்டம் மற்றும் இதில் நீங்கள் 15 ஆண்டுகள் முதலிடு செய்யலாம் மேலும் வரிச்சலுகைகளும் உண்டு மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் இணைந்துக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு காலண்டிற்க்கும் ஒரு முறை மத்திய நிதி அமைச்சகம் இந்த திட்டத்திற்க்கு வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறது.
இந்தியாவில் மிகவும் இலாபகரமான 7 கிராமப்புற தொழில்கள்.!!
பரஸ்பர நிதி முதலீடு.( Mutual fund investment)
பணத்தை சேமிக்க மாத வருமானம் ஈட்டும் நபர்கள் அதிக அளவில் விரும்பும் திட்டம் மியூச்சுல் ஃபண்டு காரணம் பாதுகாப்பானது. மேலும் பின்வரும் திட்டங்கள் மூலம் நீங்கள் முதலீடு செய்யலாம் கடன் சார்ந்த திட்டங்கள், ஹைபிரிட் திட்டம், பேலன்ஸ்ட் பண்டுகள், கில்ட் பண்டுகள், இன்கம் பண்டுகள், செக்டோரல் பண்ட், டெப்ட் பண்டு, போன்ற பண்டுகளில் நீங்கள் எளிதாக முதலீடு செய்யலாம்.