top 5 Signs your heart is infected coronavirus
கொரோனா வைரஸால் உங்கள் இதயம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்(top 5 Signs your heart is infected coronavirus)
சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் மனித உடலில் நுரையீரலை மட்டும் பாதிக்கிறது அல்லது சுவாச பிரச்சனை மட்டும் ஏற்படுகிறது என்று ஆரம்பத்தில் அனைத்தும் மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இந்த வைரஸை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்யும் பொழுது உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் இந்த வைரஸ் தாக்குகிறது என்ற முடிவு தெரிய வருகிறது.
ஜாமா ஆய்வின்படி கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து முழுமையாக குணமடைந்த நபர்களுக்கு இருதய சிக்கல்கள் தொடர்ந்து அறிகுறியாக தென்படுகிறது.
இருதய பிரச்சனை உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அவர்களை முழுமையாக குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும்.
சீனாவில் உள்ள சிடிசி வீக்லி நடத்திய ஆய்வில் சீனாவில் கொரோனா வைரஸால் இறந்த மக்கள் 22 சதவீதம் இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற புள்ளி விவரம் தெரிய வருகிறது.
மனித உடலில் தென்படும் அறிகுறிகளின் தன்மை.
மனித உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனே அறிகுறி தென்படும் அல்லது நோய் 80 சதவீத அளவிற்கு வளர்ந்த பின்பு தென்படும் ஆனால் அறிகுறிகள் அற்ற நோய்தொற்று நமது இதயத்தை பாதித்திருந்தால் சில நாள்களில் அதன் அறிகுறிகள் தென்படும் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
எனவே நோய் தொற்று காலங்களில் இருதயத்தை கவனித்துக்கொள்வது மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.
மார்பு வலி அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு.
கொரோனா வைரஸ் நோய் தொற்று இருதயத்தை பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் கடுமையான சோர்வு களைப்பு அல்லது மார்பு வலி ஆகியவைகள் ஏற்படும்.
பொதுவாக ஒரு நோய் தொற்று மனித உடலைத் தாக்கினால் இரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் ஏற்படும் அதுபோலவேதான் கொரோனா நோய்த்தொற்று மனித உடலைத் தாக்கினால் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அழுத்தத்தை சரி செய்வதற்கு இருதயம் கடுமையாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது இதுவே இருதய பிரச்சனைக்கு முதன்மையாக அமைகிறது.
உங்களுக்கு தொடர்ந்து நாள்பட்ட சோர்வு அல்லது மார்பு வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
இருதயத்தில் ஏற்படும் தசை வீக்கங்கள்.
மாரடைப்பு மற்றும் இருதய தசைகளில் ஏற்படும் வீக்கம் covid-19 உடன் தொடர்புடைய மிகப்பெரிய சிக்கலாக இப்பொழுது உள்ளது.
ஒருவருக்கு இருதயத்தில் வைரஸின் நேரடி தாக்குதலால் அல்லது சைட்டோகைன் புயல் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
ஒருவருக்கு நாள்பட இருதயத்தில் அலர்ஜி அல்லது அது தொடர்புடைய ஏதேனும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருந்தால் இருதய தசைகளை இது பலவீனமடையச் செய்யும்.
மேலும் உடலில் இது ரத்த ஓட்டத்தை சீர்குலைக்கிறது இதனால் ரத்த அழுத்தம் எதிர்பாராதவிதமாக உடலில் மாறுபடும் இருதயம் மற்றும் நுரையீரல்களில் அதிக அழுத்தம் இருந்துகொண்டே இருந்தால் இருதய செயலிழப்பு இது வழிவகுக்கும்.
Coronavirus prevention Best 5 tips in Tamil
இரத்தத்தில் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடு.
ஆக்ஸிஜனேற்றபட்ட இரத்த ஓட்டத்தை கொரோனா வைரஸ் சில நேரங்களில் தடுக்கும் பொழுது.
ஹைபோக்ஸியா போன்ற நிலை ஏற்பட்டால் மனித உடலில் மனக்குழப்பங்கள் உதடு மற்றும் முகம் நீல நிறமாக மாறுதல் போன்றவைகள் ஏற்படும் இவையெல்லாம் இருதயப் பிரச்சனைகள்.
இரத்த ஓட்டத்தில் சில நேரங்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனால் இரத்த உறைவு ஏற்படலாம் அல்லது இருதயத்தில் அலர்ஜி ஏற்படக்கூடும்.
இதனால் இருதயம் அதன் வேலையை செய்வது கடினமாகும் மேலும் சீரற்ற இதயத்துடிப்பு குழப்பமான மனநிலை பேசுவதில் ஏற்படும் சிரமம் அதிகமான வியர்வை போன்றவைகள் இருதய செயலிழப்பின் அறிகுறிகள் ஆகும்.
சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள்.
மார்பு பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்.
பொதுவாக மார்புவலி நுரையீரல் செயல்பாடு குறைவு மூச்சுத் திணறல் மற்றும் இருதயத்தின் செயல்பாடு பாதிப்பு ஆகியவைகளால் ஒருவருக்கு ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ட்விட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உச்சகட்டமாக இருந்தாள் அவருடைய நுரையீரல் முழுவதும் தாக்கியிருக்கும் இதனால் மூச்சு விடுவதற்கு அதிக சிரமங்கள் ஏற்படும் மேலும் இது இதயத்தை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
சில நேரங்களில் தீவிரமான மார்பு வலி அல்லது சீரற்ற இதயத்துடிப்பு மயக்கம் கூட ஏற்படலாம்.