Top 7 best farming business ideas in tamil
அதிக லாபம் தரக்கூடிய பண்ணை சார்ந்த 7 தொழில்கள்
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே சொந்த தொழில் செய்து அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அப்படி நினைக்கும் நபர்களுக்கு அதற்கான முயற்சியும் எந்த மாதிரியான தொழில் செய்ய வேண்டும் என்பது பற்றி மற்றவர்களிடம் கலந்துரையாடி.
அந்த தொழிலை செய்து லாபத்தை பெற முடியும் சில நபர்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும்.
காரணம் இந்த தொழில் எப்பொழுதுமே வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் என்பது மட்டுமில்லாமல் தொழிலில் நஷ்டம் என்பதே கிடையாது.
கொரோனா வைரஸ்க்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதே பல நபர்களின் விருப்பமாக இருக்கிறது.
ஏனென்றால் இந்த இந்த வைரஸால் ஏற்பட்ட மாற்றங்கள் என்பது அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டது.
இறால் வளர்ப்பு
இந்தத் தொழில் முதலில் கடல் மற்றும் ஏரி ஓரங்களில் தான் செய்யப்பட்டு வந்தது, இப்பொழுது இறால் வளர்ப்பு நல்ல வருமானம் தருகிறது என்பதால்.
பெரும்பாலான இடங்களில் இந்த தொழில் செய்யப்படுகிறது இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் கட்டாயம் தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
ஒரு சிறிய குட்டையை சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அமைத்து. இறால் வளர்ப்பு செய்து வருமானத்தை பெற முடியும் குறைந்தபட்சம் 7லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் இலாபம் என்பது 70 முதல் 80 சதவீதம் வரை கிடைக்கும்.
வாத்து வளர்ப்பு
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலில் இதுவும் எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.
இதற்கு போதுமான இட வசதியும், தண்ணீர் வசதியும், இருந்தால் போதும்.
இதில் நீங்கள் வாத்து மற்றும் அதன் முட்டை விற்பனை செய்து இரட்டிப்பு லாபத்தை பெறமுடியும் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் லாபம் என்பது 90% கிடைக்கும்
மூலிகை செடி விற்பனை
மூலிகைகள் சார்ந்த செடிகளை வளர்ப்பது மிகவும் நல்லது அதே சமயத்தில் இதில் அதிகமான லாபத்தை பெறமுடியும்.
காரணம் என்றால் இப்பொழுது மக்களிடத்தில் இயற்கை சார்ந்த விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது.
மூலிகை செடிகளை பற்றி தகவல்கள் ஓரளவிற்கு உங்களுக்கு தெரிந்தால் இந்த தொழிலை நீங்கள் எளிமையாக தொடங்கலாம்.
துளசி தூதுவளை, ஆடாதொடை,தூதுவளை, கற்பூரவள்ளி, மூலிகை செடிகளை வளர்த்து அதிக லாபம் பெற முடியும்.
இயற்கை உரம் தயாரித்தல்
குறைந்த முதலீட்டில் இப்பொழுது அதிகமான லாபம் தரும் விவசாயம் சார்ந்த தொழில் என்றால் இயற்கை உரம் தயாரித்தல் பெண்கள் இந்த தொழிலை வீட்டிலிருந்தே செய்யலாம்.
மாட்டுச்சாணம், இலைகள், போன்றவற்றை வைத்து எளிமையாக உங்களால் இயற்கை உரம் தயாரிக்க முடியும்.
இயற்கை உரங்களை சந்தைகளில் விற்பனை செய்து அதிகமான வருமானத்தை பெற முடியும்.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முதலீடு பற்றி விவரம் தோராயமாக இருக்கும்.
தொழிலை சிறிய அளவில் தொடங்கினால் குறைந்த முதலீடு கட்டாயம் தேவைப்படும், பெரிய அளவில் தொடங்கினால் அதற்கேற்ப முதலீடு மாறுபடும்.
உலர்ந்த மலர் விற்பனை
பூக்கள் வளர்ப்பு பற்றி எல்லோரும் கட்டாயம் கேள்வி பட்டிருப்போம் ஆனால் மலர்கள் விரைவில் கெடும் பொருள் என்பதால்.
அதற்கு மாற்றாக நீங்கள் உலர்ந்த மலர்களுக்கு தேவையான அலங்காரங்களை செய்து நீண்ட காலத்திற்கு விற்பனை செய்யலாம் இதில் காய்கறிகள் தண்டுகள் போன்றவற்றையும்பயன்படுத்தலாம்.
காடை வளர்ப்பு
காடை வளர்ப்பு தொழிலுக்கு உங்களுக்கு குறைந்த இடம் போதும் காடை பறவைகளுக்கு எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகமாக இருப்பதால் நோய்கள் பற்றி நீங்கள் பயப்பட தேவையில்லை.
இதை நீங்கள் 1 மாதம் அல்லது 40 நாட்கள்க்குள் விற்பனை செய்துவிட முடியும்.
இந்த தொழிலுக்கு முதலீடு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும், வருமானம் என்பது இந்த தொழிலில் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும்.
மாட்டுப் பண்ணை அல்லது ஆட்டு பண்ணை
விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒரு சிறந்த தொழில் என்றால் அது மாட்டுப்பண்ணை அல்லது ஆட்டுப்பண்ணை தான்.
கணையப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்ன..!
ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பாலைத்தான் அனைவரும் வாங்க ஆசைப்படுவார்கள், அதனால் உங்களுக்கு எப்பொழுதும் இந்த தொழிலுக்கு அதிக மதிப்பு இருந்துகொண்டே இருக்கும்.
குறிப்பாக மாட்டுப் பாலை விட ஆட்டுப் பால் விலை அதிகம் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்.
ஒரு லிட்டர் ஆட்டுப் பால் குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
Top 10 foods to improve sex power in tamil
அதுமட்டுமில்லாமல் ஆட்டுக்கறி என்பது இப்பொழுது ஒரு கிலோ 1000/- ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது, குறைந்தபட்சம் 4 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.