நமது அன்றாட வாழ்க்கைக்கு சில ஊட்டச்சத்துக்கள் அவசியமாக தேவைப்படுகிறது (top 7 essential foods for pregnant women)
உடல் சரியாக இயங்குவதற்கு கர்ப்பிணிப் பெண்கள் சரியான ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டால் மட்டுமே வயிற்றில் உள்ள குழந்தைக்கு போதுமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது எந்த மாதிரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு அடிப்படை சந்தேகம் இருக்கும்.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது போதுமான ஊட்டச் சத்துக்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் குழந்தைக்கு குறைபாடு ஏற்படக்கூடும் மற்றும் குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இதனால் பிற்காலத்தில் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்களை பற்றி மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வைட்டமின் டி
உடலில் சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி அவசியம் வேண்டும். அதனால் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் வளர வைட்டமின் டி மிகவும் தேவை இதற்கு பால் மீன்கள் மற்றும் சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெறலாம் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 0.015 மில்லிகிராம் அளவு வைட்டமின் டி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோடின்
குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் நன்றாக வளர்வதற்கு தாய் மற்றும் குழந்தைக்கு தைராய்டு ஹார்மோன்கள் அவசியம் சுரக்க வேண்டும் இதற்கு அயோடின் சத்து மிகவும் தேவை கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 250 மில்லிகிராம் அயோடின் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புரதச்சத்து
கர்ப்பிணி பெண்களின் உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதை உறுதி செய்யவும் கர்ப்பிணி பெண்களுக்கு மார்பகங்கள் வளர உதவுவது மட்டுமில்லாமல் குழந்தையின் திசுக்கள் மற்றும் மூளை வளர்ச்சி அடைய புரதச்சத்து மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இதனால் தாய் மற்றும் குழந்தைகளுக்கு புரதச்சத்து முதன்மையாக தேவை என மருத்துவர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 600 -100 கிராம் புரத சத்துக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு பறவை இறைச்சி, மீன், சீஸ், பால், கொட்டைகள், மற்றும் பருப்பு வகைகளில் இருந்து புரத சத்துக்கள் அதிகம் கிடைக்கும்.
வைட்டமின் ஏ
குழந்தைக்கு கண்பார்வை மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் ஏ அவசியம் தேவை இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 900 மில்லி கிராம் வைட்டமின் ஏ எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு இறைச்சி, பீன்ஸ், கேரட், கீரை வகைகள், போன்ற உணவுகளில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.
ஃபோலேட்
கீரை வகைகள், கமலா பழச்சாறு, பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் போன்ற உணவுகளில் அதிக அளவு இந்த வைட்டமின் ஃபோலேட் சத்து காணப்படுகிறது.
குழந்தை உடலில் புரதச்சத்து மற்றும் இரத்தம் உற்பத்தி செய்ய இந்த ஃபோலேட் சத்து உதவும் அதுமட்டுமில்லாமல் குழந்தைக்கு பிறவியில் ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளை தவிர்க்கவும் செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தின் முதல் 12 வாரங்களில் குறைந்தபட்சம் 200 மில்லி கிராம் ஃபோலேட் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும் நாளொன்றுக்கு 600 மில்லி கிராம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இரும்புச்சத்து குழந்தைக்கு சரியான அளவில் பிராணவாயு கொண்டு சேர்க்க மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி பிரசவ காலத்தில் ஒரு பெண் குறைந்தது 100 நாட்களாவது இரும்புச்சத்து 100 மில்லி கிராம் அளவிற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
முடி வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த 7 வழிகள்
500 மில்லி கிராம் அளவிற்கு போலிக் அமிலம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் மற்றும் சிகப்பு இறைச்சி, காய்ந்த பட்டாணி, பேரிச்சம்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
what are the symptoms Monkey B virus 2021
சுண்ணாம்பு சத்து
குழந்தைக்கு வலுவான எலும்புகள், பற்கள், அமைவதற்கு சுண்ணாம்பு சத்து மிகவும் அவசியம். சீஸ், பால், மற்றும் மத்தி மீனில் சுண்ணாம்பு சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 மில்லி கிராம் அளவிற்கு சுண்ணாம்புச் சத்து எடுத்துக்கொள்ளவேண்டும்