உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும் முதல் உணவுகள் (Top 7 Foods That Can Help Improve Your Sleep).
இன்றைய மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்றால் அது தூக்க கோளாறு மூன்றில் ஒரு பெரியவருக்கு தூக்க கோளாறு உள்ளது என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
மேலும் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒருவரில் தூக்க கோளாறு நீண்டகாலமாக உள்ளது என்று அறியப்படுகிறது இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம் காலநிலை மாற்றம் மற்றும் இன்றைய காலகட்டங்களில் இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுகள்.
உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை எளிதாக குணப்படுத்தலாம் ஒவ்வொரு இரவும் தூக்கத்தை தூண்டும் சில உணவுகளை எடுத்துக் கொள்வதால் நீங்கள் சிறந்த தூக்கத்தை பெற முடியும் பின்வரும் இயற்கை உணவுகளை பின்பற்றுவதன் மூலம் உங்களால் அதிக நேரம் தூங்க முடியும்.
மீன்கள்.

வைட்டமின் பி6 மீன்களில் ஏராளமாக உள்ளது சால்மன், டூனா மற்றும் ஹாலிபட் ஆகிய மீன்களில் தூக்க ஹார்மோன்களை தூண்டும் மெலடோனின் சத்துக்கள் அதிக உள்ளது.
இரவில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு சரியான தூக்கம் கிடைக்கும் இதற்கு மீன் ஒரு சரியான தீர்வாக அமையும்.
தயிர்.

கால்சியம் நீங்கள் சரியாக தூங்க டிரிப்டோபான் மற்றும் மெலடோனின் ஹார்மோன்களை அதிகமாக உருவாக்குகிறது தயிர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கால்சியம் பால் தொடர்பான எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் முயற்சி செய்யக் கூடிய பிற விஷயங்களில் பால், சீஸ் அல்லது வெ ண்ணெய்களையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரவு முழுவதும் உங்களை தூங்க வைக்க உதவும் மேலும் வாழைப்பழத்தில் டிரிப்டோபான் மற்றும் மெக்னீசியாம் அதிகமுள்ளது இவை இயற்கை மயக்க மருந்துகளாகும்.
முழு தானியங்கள்.

இந்த தானியங்கள் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது இதன் விளைவாக மூளையில் டிரிப்டோபன் செயல்பாடு ஏற்படுகிறது இவற்றில் மெக்னீசியமும் உள்ளது.
இது உங்களுக்கு தூங்குவதற்கு உதவுகிறது உங்கள் உடலில் மெக்னீசியம்அளவு குறைவாக இருக்கும் பொழுது நீங்கள் இரவில் எழுந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
5 Best Habits Boost Your Sleeping in tamil
கொட்டைகள்.

இதில் அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் ,பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் அடங்கும் இவை அனைத்தும் மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் ஆகியவற்றைக் கொண்ட செரோடோனின் அளவை அதிகரிக்கிறது.
முட்டை.

காலை மற்றும் இரவு வேளைகளில் நீங்கள் முட்டையை உங்கள் உணவில் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலில் டிரிப்டோபான் அளவு அதிகரிக்கிறது இதனால் உங்களுக்கு சரியான தூக்கம் கிடைப்பது உறுதியாகும்.
வெள்ளை அரிசி.

வெள்ளை அரிசி அதிக கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளது இதில் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு இயற்கையாகவே அதிகமாக உள்ளது இதன் பொருள் டிரிப்டோபன் உங்கள் மூளையில் வேகமாக தூக்கத்தை உருவாக்கும்.
சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்க வேண்டிய 5 விட்டமின்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.