trichy recruitment notification 2020 big

திருச்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020(trichy recruitment notification 2020)

2020ஆம் ஆண்டு அனைவரின் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆண்டு என்று சொல்ல வேண்டும் காரணம் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்குபல்வேறு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் வேலை தேடும் நபர்கள் முற்றிலும் முடங்கிப் போனார்கள்.

இந்த ஆண்டு பல லட்சம் மக்களின் வேலை பறிபோனது ஆனால் அரசு அலுவலர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டார்கள் ஐந்து ரூபாய் சம்பளம் என்றாலும் அரசு வேலை வேண்டும் என்று நம் முன்னோர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள் அதுபோல் இப்பொழுது நடந்துவிட்டது.

கோவையில் துப்புரவு பணிக்கு எம்பிஏ படித்த பெண் ஒருவர் வேலையில் சேர்ந்தார் இந்த செய்தி தமிழ்நாட்டின் முதன்மை செய்தியாக சில மாதங்களுக்கு முன்பு வலம் வந்தது காரணம் அரசு வேலை என்பது பாதுகாப்பான வேலை மற்றும் அரசாங்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஆனால் தனியார் துறையில் இதுபோல் நடப்பதில்லை.

228 காலிப்பணியிடங்கள் திருச்சியில்.

trichy recruitment notification 2020

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர், துப்புரவாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamilnadu Government jobs 2020 for 10th pass urgent

பணியிடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம்

trichy recruitment notification 2020

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  இனத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மொத்த பணியிடங்கள்:  228

பணியின் பெயர்: சமையலர் மற்றும் துப்புரவாளர்

காலிப்பணியிடங்கள் நிலவரம்:

சமையலர்-135

துப்புரவாளர் (பகுதி நேரம்)-80

துப்புரவாளர் (முழு நேரம்)-13

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முகவரி:

தகுதியான நபர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 19/10/2020 தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.

மாத ஊதியம்:

சமையலர்- ரூ  15,700-50,000

துப்புரவாளர் (பகுதி நேரம்)- ரூ  7,700

துப்புரவாளர் (முழு நேரம்)- ரூ  15,700

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

Leave a Comment