Types of soils best tips in tamil 2023
மண் என்றால் என்ன மற்றும் மண்ணின் வகைகள் எத்தனை உள்ளது..!
இந்த பூமி 73% நீர் மற்றும் 27% நிலத்தால் உருவாகியுள்ளது பூமியில் ஏராளமான மர்மங்கள் நிறைந்துள்ளது,மனிதனின் அறிவியல் வளர்ச்சியால் ஒரு சிறு பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமி எப்படி உருவானது, பூமி போல் இன்னும் எத்தனை கிரகங்கள் பால்வெளியில் உள்ளது, என்பதை இன்னும் முழுமையாக மனித குலத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.
Types of soils best tips in tamil 2023 மண் என்பது பலவகை கரிம பொருட்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருட்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இந்த மண் புவியின் மேல் உருவாக்குவதால் இது புவியின் தோல் என்று அழைக்கப்படுகிறது.
பாறைகள், பெரிய விலங்குகள், மரங்கள், செடிகள், கொடிகள், ஆறு, ஏரி, குளம், குட்டை, போன்றவை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைக்கு உட்படுத்தும் போது மண் உருவாக்கப்படுகிறது.
Types of soils best tips in tamil 2023 இத்தகைய மண்ணில் கனிமம் 45% கரிமபொருட்கள் 5% காற்று 25% நீர்25% போன்ற கூட்டுப் பொருட்களை கொண்டுள்ளது மண்ணை பற்றி இன்னும் அதிகமான விஷயங்கள் கற்றுக் கொண்டே போகலாம்.
இந்த கட்டுரையில் மண்ணின் வகைகள் மற்றும் அதன் தன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டால் நீங்கள் விவசாயம் செய்வதற்கு அல்லது மாடி தோட்டம் அமைப்பதற்கு எளிதாக இருக்கும்.
Types of soils best tips in tamil 2023 எந்த மண் வகையில் எந்த செடிகள், கொடிகள், மரங்கள் வளரும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மண்ணின் வகைகள் என்ன
Types of soils best tips in tamil 2023 கரிசல் மண், செம்மண், வண்டல் மண், சரளை மண், மலை மண், பாலை மண்,என மண்கள் 6 வகைப்படுத்தப்படுகிறது உலகம் முழுவதிலும்.
வண்டல் மண் ஆற்று சமவெளிகள், வெள்ளச் சமவெளி, கடற்கரை சமவெளிகளில், போன்ற இடங்களில் காணப்படுகிறது.
கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
செம்மண் உருமாறிய பாறைகள் மற்றும் படிக பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது.
சரளை மண் அயனமண்டல பிரதேச கால நிலைகளில் உருவாகிறது.
மலை மண் மலைச்சரிவுகல் ஏற்படுவதால் உருவாகுகிறது.
பாலை மண் அயனமண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
வண்டல் மண் எப்படி உருவாகிறது
வண்டல் மண் விவசாயத்திற்கு மிகவும் சிறந்ததாகவும் தழைசத்து, நார்ச் சத்து, கனிமங்கள், அதிக நிறைந்ததாகவும் இருக்கிறது.
இந்த வண்டல் மண் மலையில் உருவாகி கடல் தேடி ஓடிவரும் ஆறு மூலம் அதிக அளவில் உருவாகிறது.
ஆறு வரும் வழியில் சிதைவடைந்த நிலையில் இருக்கும் செடி, கொடி, தாவரங்கள், விலங்குகள், போன்றவற்றை கொண்டு வரும்போது இந்த மண் உருவாகிறது.
கரிசல் மண் எப்படி உருவாகிறது
இந்த மண் தமிழ்நாட்டில் சேலம், கோவை, பெரும்பாலும் தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது.
இந்த மண்ணில் பணப்பயிர் என்று அழைக்கப்படும் பருத்தி, கரும்பு, வாழை, தென்னை, உளுந்து, மஞ்சள், போன்ற பயிர்கள் செழித்து வளரும்.
கரிசல்மண் என்பது ஒரு வகையான ஊட்டச்சத்து நிறைந்த மண் இந்த மண்ணின் தன்மை என்னவென்றால் நீரை உறிஞ்சி அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ளும்.
இந்த மண்ணில் வளரும் தாவரங்கள் எப்பொழுதும் செழிப்பாக இருக்கும்.
செம்மண் எப்படி உருவாகிறது
இந்த மண் தமிழ்நாட்டில் குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த மண்ணில் கேரட், பீட்ரூட், வேர்க்கடலை, சர்க்கரைவள்ளி கிழங்கு, போன்ற கிழங்கு வகைகள் அதிக அளவில் செழித்து வளரும் பயிர்கள்.
இதுவும் ஒரு வகை மண் தான் இந்த மண் பொதுவாக சிறப்பு சிவப்பு நிறத்தில் இருக்கும்.
சரளை மண் எப்படி உருவாகிறது
இந்த மண்ணில் பெரும்பாலும் திணை பயிர்கள், கேழ்வரகு, சோளம், கம்பு, நெல், பூக்கள், போன்ற பயிர் செடிகள் அதிக அளவில் நன்றாக வளரக்கூடியவை.
இந்த மண்ணை துருக்கல் மண் என்றும் அழைப்பார்கள், சரளை மண் பொதுவாக மலை பிரதேசங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.
பாலை மண் எப்படி உருவாகிறது
இந்த மண்ணில் எந்த ஒரு செடி கொடி தாவரங்கள் வளருவதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை, இந்த மண் இந்திய கடற்கரை ஓரங்களிலும் பாலைவனங்களிலும் காணப்படுகிறது.
இந்த மண்ணை உப்பு, கருவாடு, போன்றவை உலர்த்த மட்டுமே பயன்படுத்தலாம்.
மலை மண் எப்படி உருவாகிறது
இந்த மண்ணில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக காணப்படுகிறது.
இந்த மண்ணிலும் சில வகையான பயிர்களை விவசாயம் செய்யலாம்,இந்த மண்ணை பொறுத்தவரையில் பணிமலை வெப்பநிலை மாறுபாடுகளால் சிதைவின் காரணமாக உருவாகிறது.