UAE First Picture of Mars in volcano 2021

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையை படம் பிடித்து பூமிக்கு அனுப்பிய ஹோப் விண்கலம்(UAE First Picture of Mars in volcano 2021)

சமீபகாலமாக விண்வெளித்துறையில் உலகிலுள்ள வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கடும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய ஆராய்ச்சியை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை விண்வெளி துறையில் அதிக ஆர்வம் காட்டாத அரபு நாடுகள் இப்பொழுது செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலில் அனுப்பிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பின்பு இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலையை செவ்வாய் கிரகத்தின் அதிகாலை நேரத்தில் படம் பிடித்து பூமிக்கு  அனுப்பியுள்ளது.

முதல் புகைப்படமே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

UAE First Picture of Mars in volcano 2021

அமெரிக்கா, ஐரோப்பியா, இந்தியா, ரஷ்யா, சீனா, உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு தங்களுடைய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்திய நாடுகள்.

ஆனால் ஐக்கிய அமீரக  எமிரேட்ஸ் அனுப்பிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த எரிமலை மிக முக்கியமாக உலக விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகிறது ஏனென்றால் இதுவரை அனுப்பிய செயற்கை கோள்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலைகளை கண்டுபிடிக்கவில்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை எது.

ஒலிம்பஸ் மோன்ஸ்  என்ற செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலை சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய எரிமலை அதிகாலை சூரிய ஒளியில் வெளிவந்ததை ஐக்கிய அமீரகம் அனுப்பிய செயற்கைக்கோள் படம் பிடித்து பூமிக்கு அனுப்பி உள்ளது மேலும் இந்த செயற்கைக்கோள் படம் பிடித்த முதல் படம் இது

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த இந்த விண்கலம் ஒரு நாள் கழித்து 24,700 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் வானிலையில் மறைந்துள்ள ரகசியங்களை கண்டுபிடிப்பதற்காக இந்த விண்கலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.  https://twitter.com/liveintamilnadu

18 மாதத்திற்கு ஒரு முறை.

UAE First Picture of Mars in volcano 2021

பூமியும் செவ்வாய் கிரகமும் 18 மாதத்திற்கு ஒரு முறை சுற்றுவட்ட பாதையில் நெருக்கமாக வரும் அப்பொழுது பூமியிலிருந்து செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினாள் எரிபொருள் மிச்சமாகும் மேலும் பயண நாட்கள் குறையும்.

பூமியிலுள்ள வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை செவ்வாய் கிரகத்திற்கு தங்களுடைய செயற்கைக்கோளை அனுப்புவதற்கு காத்திருக்கும் அதன் வகையில் கடந்த வருடம் ஜூலை மாதம் சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், இந்த மூன்று நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினா.

அதில் முதன்முதலில் ஐக்கிய எமிரேட் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது ஆனால் அமெரிக்க விண்வெளி மையம் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Rover Perseverance செவ்வாய் கிரகத்தின் தரையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது இதன் வீடியோ இணையதளத்தில் நாசா வெளியிட்டது.

RBI announced new credit rules in tamil 2021உடனடியாக கடன் வழங்கும் மொபைல் செயலி அங்கீகரிக்கப்பட்டது உண்மையா அதை எப்படி தெரிந்து கொள்வது.

செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டுகள்.

687 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டாக கருதப்படுகிறது இந்த ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டுக்கு தனது பணியை செய்யும் இந்த விண்கலம் செவ்வாய் வளிமண்டலத்தை கண்காணிக்க 3 விஞ்ஞான கருவிகளை இது பயன்படுகிறது.

How to Delete Google Account best tips 2021

மேலும் வருகின்ற செப்டம்பர் 2021 மாதம் முதல் உலகிலுள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருக்கக்கூடிய வானிலைய பற்றிய தரவுகளை அனுப்பி வைக்கவும்.

JOIN US OUR TELEGRAM GROUP

Leave a Comment