Ujala scheme details best tips in tamil 2023
மத்திய அரசு குறிப்பாக கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் குறைந்த விலையில் LED மின்சார விளக்குகளை வழங்குவதற்காக,கிராமம் உஜாலா திட்டத்தினை தொடங்கி உள்ளது.
இந்த திட்டம் குறித்த நோக்கம் இலக்கு மற்றும் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது, என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
Ujala scheme details best tips in tamil 2023 இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் நாடு முழுவதும் மின்சார சிக்கனம் உள்ள மின்விளக்குகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும்.
மின்சிக்கனம் உள்ள மின்சார பாகங்களை பயன்படுத்துவதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மின்சார செலவை குறைப்பது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருப்பது, மின்சார உற்பத்திக்கான பணத்தேவையை குறைப்பது, போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது மத்திய அரசு.
இந்த திட்டத்திற்கான இலக்குகள் என்ன
20 கோடி சாதாரண மின்சார விளக்குகளை மாற்றி LED விளக்குகள் வழங்குவது.
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 105 கோடி கிலோ வாட் மின்சாரத்தை சேமிப்பது இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்சார நிலையங்களில் உற்பத்தி சுமார் 5000 மெகாவாட் குறைப்பது
நுகர்வோரின் மின்கட்டண செலவில் ஆண்டுக்கு 40,000 கோடி குறைப்பது.
செயல்படுத்தும் முறைகள் என்ன
மின்சார விநியோக நிறுவனங்களும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எரியாற்றல் திறன் சேவைகள் (EESL) நிறுவனமும் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
Ujala scheme details best tips in tamil 2023 வீட்டில் மின் மீட்டர் பொருத்தப்பட்டு மின்சார இணைப்பு கொண்ட அனைத்து குடும்பத்தினரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் EMI முறையில் வாங்கிக் கொள்ளும் வசதி உள்ள.
LED விளக்குகள் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்
சமீபத்தில் மின் கட்டணம் செலுத்திய ரசீது நகல்
புகைப்பட அடையாள சான்று
முகவரி சான்று (மின் கட்டண ரசீது உள்ளபடி)
மாதாந்திர தவணையில் பெறுவது என்றால் முதல் தவணை முன்பணம்.
மாதாந்திர தவணை இல்லாமல் மொத்தமாக ஒரே தடவையில் பணம் செலவு கொடுத்து விளக்குகளும் பெற்றுக்கொள்ளலாம், ஒரு முறையில் பணம் கொடுத்தால் முகவரி சான்று தேவையில்லை.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் 2 விளக்குகள் முதல் அதிகபட்சம் 10 விளக்குகள் வரை மானிய விலையில் கொடுக்கப்படும்.
சராசரியாக ஒரு வீட்டில் 5 முதல் 6 விளக்குகள் பயன்படுத்துவதாக மத்திய அரசின் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது நாட்டில்
Ujala scheme details best tips in tamil 2023 அரசாங்கத்தின் மூலம் இந்த திட்டத்திற்கு மானியம் நேரடியாக வழங்குவதில்லை.
மின்கட்டணம் விகிதமும் மாறுவதில்லை.
எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனம் LED விளக்குகளை 40 சதவீத விலைக்கு கொடுக்கிறது.
நுகர்வோருக்கு மின் கட்டணம் குறைகிறது.
அரசுக்கு மின் உற்பத்தி முதலீடு செலவு குறைகிறது
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் தமிழகத்தின் நிலை என்ன
Ujala scheme details best tips in tamil 2023 தமிழகத்தைப் பொறுத்தவரையில் உஜாலா திட்டத்தின் கீழ் இதுவரையில் LED விளக்குகள் 43,62,984 விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 566,608 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது, என தமிழக அரசு தெரிவித்துள்ளது, ரூபாய் 227 கோடி பணமும் சேமிக்கப்படுகிறது.