ukraine vs russia new war started in 2022.
ukraine vs russia new war started in 2022
உலக நாடுகளை மிரட்டும் ரஷ்யா குழப்பத்தில் அமெரிக்கப் படைகள் என்ன நடக்கப்போகிறது அடுத்தகட்டம்..!
ரஷ்யாவை பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தெளிவான முடிவுகளை மேற்கத்திய நாடுகளுடன் எடுக்கப்படாத நிலையில் பொறுமையை இழந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
வியாழக்கிழமை (24/02/2022) ஏற்கனவே ரஷ்ய கிழக்கு உக்ரைன் பகுதியில் கைப்பற்றிய டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) வாயிலாகவே நாட்டுக்குள் நுழைந்து போர்தொடுக்க உத்தரவிட்டார்.
மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பில் இருக்கும் உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை ரஷ்யா அதிபர் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர்.
இன்று காலையில் முடிவு எடுத்த நிலையில் ரஷ்ய அதிபர் தன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பீரங்கி மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்க தொடங்கியது
புடின் தனது பேச்சை நாட்டுமக்களுக்கு முடித்த அடுத்த நொடியில் கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து குண்டுகள் பறக்கத் தொடங்கிவிட்டது.
இதே வேளையில் தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது, ஆனால் ரஷ்ய அதிபர் இதை ஒரு பொருட்டாக பொருட்படுத்தவில்லை.
உலக நாடுகளுக்கு மிரட்டல்
உக்ரைன் நாட்டிற்கும் மேற்கத்திய நாடுகளும் அனைத்தும் குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில்.
இன்று புடின் தனது பேசுகையில் ரஷ்யாவின் செயலுக்கு எந்த நாடாக தடையாக இருந்தாலும் ரஷ்யாவிடமிருந்து எதிர்பாராத பின் விளைவுகளை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நோட்டாவில் இணைவதை தடுக்கவும் மாஸ்கோ பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் ரஷ்யா வைத்த கோரிக்கையை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புறக்கணித்துவிட்டது.
இது இந்தப் போருக்கான காரணம் என குற்றம் சாட்டினார்,உக்ரைன் படை வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டால் போர் மண்டலத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது உலகில் உள்ள அனைத்து நாடுகளும் காரணம் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் தேவையான அனைத்து கொள்முதல்களும் தடைபடும்.
சுவையான பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி..!
மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது என பல்வேறு நபர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Top 10 best small business ideas in tamil
இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்பது 102 டாலரை தாண்டியது, இனி வரும் காலங்களில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை குறைந்தபட்சம் 120 ரூபாயை கடந்துவிடும்.