Unemployment list of Tamil Nadu 2023
Unemployment list of Tamil Nadu 2023 தமிழ்நாட்டில் 66 லட்சம் நபர்கள் வேலைக்காக காத்திருப்பு அதில் 29 லட்சம் நபர்கள் இளைஞர்கள் என ஒரு அதிர்ச்சிகரமான தகவல் இப்பொழுது வெளியாகி உள்ளது..!
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவரின் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்துள்ளது.
அரசாங்கம் பணிக்கு மட்டுமே செல்ல வேண்டும் என பல நபர்கள் நினைப்பதை இந்த எண்ணிக்கை உயர்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தாரர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 ஆக உள்ளது.
Unemployment list of Tamil Nadu 2023 இதில் ஆண்கள் எண்ணிக்கை என்று எடுத்துக் கொண்டால் 31 லட்சத்து 76 ஆயிரத்து 600 நபர்கள் அதேபோல் பெண்கள் எண்ணிக்கை என்று எடுத்துக் கொண்டால் 35 லட்சம் 77 ஆயிரத்து 671 நபர்கள்.
மேலும் இவர்களை தவிர்த்து 3ம் பாலினத்தவர் 266 நபர்கள் உள்ளார்கள், இதனிடையே வேலைக்காக காத்திருப்போர் வயது வாரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டும் 17 லட்சத்தி 65 ஆயிரத்து 888 நபர்கள் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு முடித்தவுடன் பதிவு செய்தனர் அதன் அடிப்படையில் இந்த கணக்கீடு.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா 5 Tamil health tips List natural Detox drinks
19 முதல் 30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை பொறுத்தவரை 28 லட்சத்தி 43 ஆயிரத்து 792 ஆக உள்ளது கல்லூரி பட்டப்படிப்பை பதிவு செய்தல் அடிப்படையில் இந்த கணக்கீடு.
Unemployment list of Tamil Nadu 2023 அதேபோல் 31 முதல் 45 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 32,900 நபர்கள் 46 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 நபர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 66 ஆயிரத்து 111 நபர்கள் உள்ளார்கள்.
இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவர்கள் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் நாட்களில் வேலைவாய்ப்பு முகாம்களில் பதிவு செய்வார்கள் என்பதால் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரக்கூடும் என தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது, ஆனால் வேலைவாய்ப்பு என்பது முற்றிலும் குறைவாகவே உள்ளது.