unemployment scheme full details in tamil 2022
வேலை இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை திட்டம்..!
தமிழக அரசு மூலம் வேலை வாய்ப்புகள் இல்லாத மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், உதவித்தொகை திட்டம் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பெண்-ஆண் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறலாம் உங்களுடைய தகுதிக்கு ஏற்ப பணம் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த திட்டத்தை பற்றி மேலும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
முதுகலை பட்டதாரிகளும் / இளங்கலை பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இருப்பினும் மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பொறியியல், போன்ற பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
உதவித்தொகை முழு விவரம்
10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200/-
10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூபாய் 300/-
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றும் அதற்கு சமமான தகுதி உடையவர்களுக்கு ரூபாய் 400/-
பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு, இளங்கலை பட்டதாரிகளுக்கு, ரூபாய் 600/-
மேலே தெரிவிக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய படிப்பு விவரத்தை பதிவு செய்து.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தில் தங்கள் உதவி தொகையை பெற முடியும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 50000/- க்கு மேல் இருக்கக்கூடாது 50000/- க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இந்த உதவித் தொகையினை விண்ணப்பித்து பெற முடியாது.
வயது வரம்பு என்ன
பொதுப் பிரிவில் இருக்கும் நபர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற பிரிவு நபர்களுக்கு 45 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி
உங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான விண்ணப்பங்களை நீங்கள் பெறலாம்.
விண்ணப்பங்களை பெற்ற பிறகு அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து.
உங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று, விண்ணப்பங்களை மறுபடியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சில முக்கிய குறிப்புகள்
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்லூரி மற்றும் பள்ளி படிப்பினை முழுமையாக தமிழ்நாட்டில் படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தனியார் துறை அல்லது அரசு துறையில் எந்த விதமான ஊதியம் பெறும் பணியில் அல்லது சுய தொழிலில் ஈடுபட கூடாது.
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..!
அதேபோல் விண்ணப்பதாரர்கள் தனியார் அல்லது அரசுத் துறைகளிடம் இருந்து வேறு எந்த வகையிலும் உதவித்தொகையை பெற கூடாது.
Want to grow hair on the scalp new 5 tips
இந்த உதவித்தொகை பெறுவதன் மூலம் உங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் காலத்தில் பதிவை புதுப்பித்தல் வேண்டும்.