uniform civil code law details in india 2023
பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்ற நிலை குழு முன் சட்ட ஆணையம் இன்று ஆஜர் விளக்கம்..!
பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்திற்கான நாடாளுமன்ற நிலை குழு முன்பாக சட்ட ஆணையம் இன்று ஆஜராக உள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல்கள் தற்போது கட்சிந்துள்ளது.
திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிர்வு, உள்ளிட்டவை தொடர்பாக இந்தியா முழுவதும் எல்லோருக்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது.
பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடம் புதிதாக கருத்துக்களை கேட்கும் நடவடிக்கையும் மத்திய அரசு சட்ட ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பொது அறிவிப்பை கடந்த 14ஆம் தேதி சட்ட ஆணையம் வெளியிட்டது,நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம் என்ற கருத்தை பிரதமர் மோடி முன் வைக்கிறார்.
குறிப்பாக இரண்டு விதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் சொல்வதால்.
நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது கட்டாயம் அவசியம் ஆனால் பொது சிவில் சட்ட விவகாரத்தில் சில தவறான கருத்துக்களை.
சில கட்சிகள் பரப்பி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் ஏன் அவசியம்
ஆதரவும் எதிர்ப்பும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ளது,எதிர்க்கட்சிகள் இந்த கருத்தை கடுமையாக எதிர்க்கிறது.
இதை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துகிறது என்கிறார்கள் அதாவது அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தற்போது ஆளும் பாஜக அரசு.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சட்டம் மற்றும் பணியாளர் விவரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக்குழு பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து.
மத்திய அரசின் சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக துறையிடம் விளக்கம் பெற உள்ளது.
இதற்காக இன்றைய தினம் தங்கள் முன்பு நேரில் ஆஜராகும் படி அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் என்ன பயன்கள்
சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகள் பொது சிவில் சட்டம் தொடர்பான அறிக்கை விவரங்களை நாடாளுமன்ற நிலை குழுவிடம் என்று தெரிவிக்க போகிறார்கள்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக இதுவரை சுமார் 9 லட்சம் கருத்துக்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன.
விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அந்த கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது,
பொது சிவில் சட்டத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் பற்றி விவாதத்திற்கு இந்த அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது,மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது பொது சிவில் சட்டம் குறித்து.
தமிழகத்தில் என்ன மாதிரியான நிகழ்வு
தமிழகத்தில் பொது சிவில் சட்டம் குறித்து ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to get new ration card in tamil nadu