Veedu Vastu Shastra useful tips in tamil 2022

Veedu Vastu Shastra useful tips in tamil 2022

வீடு கட்ட பார்க்க வேண்டிய முக்கியமான வாஸ்து சாஸ்திரம் என்ன..!

வாஸ்து சாஸ்திர பார்ப்பதற்கான முக்கியமான காரணம் மக்கள் அவர்களின் நல்வாழ்விற்காக செய்யும் எந்த விதமான காரியங்களும் அசுப பலன்களை தரக் கூடாது என்பதற்காக மட்டுமே.

அதிலும் கண்டிப்பாக வீடு கட்டும் போது எல்லோரும் வீட்டுக்கு தேவையான வாஸ்து சாஸ்திரங்களை ஒருமுறைக்கு இருமுறை பல்வேறு இடங்களில் பார்ப்பார்கள்.

கட்டிடம் கட்டுவதற்கான மனை, கட்டிடத்தின் அமைவிடம்,திசை போன்றவற்றை கணிப்பதில் முக்கிய பங்கு வாஸ்துவிற்கு உள்ளது.

அந்த வகையில் இன்றைய ஆன்மிக பகுதியில் வீடு கட்டும் போது எந்த மாதிரியான வாஸ்துகளை முக்கியமாக பார்க்க வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

Veedu Vastu Shastra useful tips in tamil 2022

வீடு கட்டும் வாஸ்து முறை என்ன

வாஸ்து சாஸ்திரம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, என எட்டு திசைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது.

வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவில் இருப்பது மிகவும் நல்லது.

வீட்டின் வாசல் கிழக்கு, மேற்கு, வடக்கு, ஆகிய திசைகளில் அமைவது சிறந்தது, வடகிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

வீடு கட்டும்போது தெற்கு, மேற்கு, தென்மேற்கு, ஆகிய திசைகளில் கட்டிடங்கள் உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, பகுதியில் சற்று தாழ்ந்தும் இருக்கவேண்டும்.

தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அலமாரிகள் அமைத்தால் மிகவும் நல்லதாக வீடு அமையும், அதுமட்டுமில்லாமல் வீட்டில் அமைதி சூழ்நிலை நிலவும்.

Veedu Vastu Shastra useful tips in tamil 2022

மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

மேற்கு திசையில் வீட்டின் வாசல் இருந்தால் வீட்டில் சுபிட்சமான பலன்கள் கிடைக்கும்,இந்த திசையை வருண பகவான் பார்வையிடுவதால் இல்லத்தில் நல்ல பலன்கள் எளிதில் கிடைக்கும்.

மேஷ ராசிக்கு இந்த திசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

கிழக்கு நோக்கி வீட்டின் வாசலில் இருந்தால் கடவுளின் ஆசி உங்களுக்கு அதிகம் கிடைக்கும், ஏனெனில் கிழக்கு திசையில்தான் இந்திரன் தங்கியிருக்கிறார்.

வீட்டின் வாசலில் அதிக நேரம் சூரிய வெளிச்சம்படுவது நன்றாக இருக்கும்.

Veedu Vastu Shastra useful tips in tamil 2022

வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

வடக்கு திசையை நோக்கி வீட்டின் வாசல் அமைந்தால் இல்லத்தில் செல்வச்செழிப்பு எப்பொழுதும் அதிகமாக இருக்கும், ஏனெனில் இந்தத் திசையில்தான் குபேர பகவான் வாசம் செய்கிறார்.

மேலும் பூஜை அறை வடக்கு திசை நோக்கி இருந்தால் மிகவும் நல்லது.

தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

Veedu Vastu Shastra useful tips தெற்கு திசையில் எமன் வாசம் செய்வதால் பெரும்பாலானவற்றில் வீட்டின் வாசலை அமைப்பதில்லை ஆனால் இந்த திசை தொழில் அதிபர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

புதிய வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் என்ன

Veedu Vastu Shastra useful tips வடகிழக்கு திசை நோக்கி நுழைவாயில், பூஜை அறை, மற்றும் குளியல் அறை, வைப்பதே சிறந்தது, மேலும் இது ஈசான்ய முலை என்பதால் இல்லத்தில் சகல செல்வங்களும் குடிகொள்ளும்.

தென்கிழக்கு திசை, அக்னி திசைக்கு, உரிய எனவே இந்த திசையில் சமையலறை அமைப்பது நல்லது மேலும் இந்த திசையில் பெண்களின் சக்தி சமநிலை செய்யப்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

வடமேற்கு மூலையை நோக்கி படுக்கை அறை அமைப்பது மிகவும் நல்லது, இந்த திசைநோக்கி அமைக்கப்படும் வீட்டில் நிம்மதி, செல்வம், புகழ், அதிக பண வரத்து, போன்ற சிறப்பம்சங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தென்மேற்கு மூலையை நைருதி மூலை அல்லது கன்னிமூலை என்று அழைப்பார்கள், இந்த மூலையில் நீர் உபயோக தொட்டி அமைப்பது நல்லது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கான சிலபஸ் மாற்றம் அதற்கான அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்..!

மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும்.

வீடு கட்ட திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி, போன்ற கிழமைகள் உகந்தது.

Following these to quit drinking best 5 tips

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் வீட்டின் வாசல், ஜன்னல், சமையலறை, படுக்கையறை, குளியலறை, என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சரியாக அமைப்பது நல்லது.

ஒருவேளை நீங்கள் சரியான வாஸ்து சாஸ்திரத்தில் வீடு கட்டவில்லை என்றால், பல்வேறு வகையான சிரமங்களை அனுபவிக்க கூடும் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது.

Leave a Comment