கொரோனா வைரஸ்ல் இருந்து பாதுகாக்க உதவும் வைட்டமின் சி அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்(Vitamin C immunity too much side effects 2021)
கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தாக்கம் இன்னும் உலக நாடுகளில் சீனாவை தவிர எந்த ஒரு நாட்டிலும் குறையவில்லை.
இந்தியாவில் இப்பொழுது 2ம் அலை வேகம் சற்று குறையத் தொடங்கியுள்ளது ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் மட்டுமே இதனை எளிதாக வெல்ல முடியும் தொற்று நோய்களின் தொடக்கத்திலிருந்து நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவர்களின் ஆய்வின்படி நீரில் கரையக்கூடிய வைட்டமின் நோய் தொற்று அபாயத்தை குறைக்கவும் வைரஸ் தொற்றுக்கு எதிராக உடலில் போராட உதவும் என்று கூறப்படுகிறது ஆனால் இந்த ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வதால் சில தேவையற்ற பக்க விளைவுகளும் வரும் அதிகபட்சமான நன்மைகளைப் பெறுவதற்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு உட்பட அனைத்தையும் சமச்சீர் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
வைட்டமின் சி ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
19 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 90 மி கி வைட்டமின் சி எடுத்துக்கொள்ளவேண்டும் பெண்களும் தினசரி 75 மி கி கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து தேவை அதிகரிக்கிறது இந்த சிறப்பு நேரத்தில் பெண்கள் முறையே 85 மி கி மற்றும் 120 மி கி வைட்டமின் சி எடுத்துக் கொண்டால் நல்ல விளைவுகள் கிடைக்கும்.
ஒரு நாளில் இந்த வைட்டமின் சி 1000 மில்லி கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டால் உடலில் வைட்டமின் சி உறிஞ்சும் திறன் 50 சதவீதமாக குறைந்து விடும் இந்த வைட்டமின் நீடித்த அதிகப்படியான உட்கொள்ளல் பல பக்க விளைவுகளும் ஏற்படும்.
வைட்டமின் சி யின் சில நன்மைகள்.
நீரில் கரையக்கூடிய வைட்டமின் தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது காயங்களிலிருந்து விரைவாக குணமாவதற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது வைட்டமின்-சி நிறைந்த உணவுகளில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன அவை உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்துகிறது ஃப்ரீ ரௌடிகளை எதிர்த்து போராடவும் இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கவும் உடலில் உள்ள திசுக்களை சரி செய்யவும் வழிவகை செய்கிறது.
எலும்புகளை சரியான முறையில் பராமரிக்கிறது.
வைட்டமின் சி போதுமான அளவு தினமும் உணவில் எடுத்துக்கொள்வதால் காயங்களை குணப்படுத்தவும் ஆரோக்கியமான எலும்புகளை மேம்படுத்தவும் முடியும் மேலும் இந்த வைட்டமின் உடலில் வளர்சிதை மாற்ற எதிர்விளைவுகளில் ஈடுபட்டுள்ளது மற்றும் உடலில் உள்ள இணைப்புகளில் நார்ச்சத்து பொருத்தத்தை தேவையான அளவு உருவாக்கிறது.
எங்கள் YouTube பக்க சேனலைக் காண இங்கே கிளிக் செய்க,
வைட்டமின் சி எடுக்க இதுதான் சரியான வழி.
நீங்கள் பழங்கள் அல்லது காய்கறிகள் மூலம் அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும்போது சரியான அளவில் உங்களுக்கு வைட்டமின் கிடைக்கும் ஒருவேளை நீங்கள் வைட்டமின் சி யை அதிக நேரம் சமைக்கும்போது வெப்பமும் ஒளியும் வைட்டமினை உடைக்கும் மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவை மாமிசம் சார்ந்த உணவில் சேர்ப்பது ஊட்டச்சத்தை நீர்த்துப்போக செய்கிறது.
தீங்குகள் ஏற்படும்.
வைட்டமின் சி ஒரு வேளை அதிகமாக எடுத்துக் கொண்டால் பொதுவாக உடலில் இருந்து சிறுநீர் வழியாக அவை அகற்றப்படும் இதனால் வைட்டமின் சி நீண்ட நேரம் உட்கொள்வது உங்களுக்கு பல வழிகளில் தீமைகளை ஏற்படுத்தும். அதிகமாக எடுத்துக்கொள்வதால் சில பொதுவான பக்க விளைவுகளை பார்க்கலாம்.
வயிற்றுப் போக்கு
குமட்டல் வாந்தி
நெஞ்செரிச்சல்
வயிற்றுப் பிடிப்பு
தலைவலி
தூக்கமின்மை
மேலும் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு ஊட்டச்சத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.