Waffle Business new ideas in tamil 2021
புதிதாக என்ன தொழில் தொடங்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த தொழிலில் ஒரு நல்ல வரப்பிரசாதமாக அமையும்.
இதில் முதலீடு குறைவு அது மட்டுமில்லாமல் எந்த ஒரு முன் அனுபவம் தேவையில்லை, இயந்திரத்தின் விலை குறைவு நீங்கள் இயந்திரம் வாங்கினால் மட்டும் போதும் அதை வைத்து இந்த தொழில் செய்வது எப்படி என்று எளிமையாக கற்றுக் கொள்ளலாம்.
இன்றைக்கு நமது இணையதளத்தில் பார்க்க இருக்கும் தொழில்தான் Waffle Business (வேஃபில்) தனித்துவம் பெற்ற இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் எளிமையாக செய்யலாம்.
இந்தத் தொழிலுக்கு இந்தியாவில் போட்டியானது மிகவும் குறைவான நிலையில் இருப்பதால், நீங்கள் இந்த தொழில் தொடங்கினால் கட்டாயம் லாபம் கிடைக்கும்.
நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலில் (waffle business) தெரிந்திருக்க வேண்டும். (waffle business) செய்வது மிகவும் எளிய விஷயம் எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு அதிகமான இணைய தளம் மற்றும் யூட்யூப் சேனல் இருக்கிறது.
அதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் சரி இப்பொழுது இந்த தொழிலுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள், இயந்திரம், தொழில் முதலீடு, போன்ற அனைத்து விவரங்களையும் இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
இதற்கு தேவைப்படும் இயந்திரம்
இந்தத் தொழில் தொடங்குவதற்கு முதலில் உங்களுக்கு (waffle machine) வாங்க வேண்டும். இந்த இயந்திரமானது 7000/- ரூபாய் முதல் இணையதளத்தில் கிடைக்கிறது.
இதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள்
மைதா
மாவு
ஆயில்
பேக்கிங் பவுடர்
சர்க்கரை
பால்
முட்டை
வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்
செய்முறை விளக்கம்
இதனை தயார் செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் மேலே கூறப்பட்டுள்ள மைதா மாவு, முட்டை, வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட், பால், சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஆயில், அனைத்தையும் தேவையான அளவு எடுத்துப் பவுலில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து (வேஃபில் இயந்திரத்தை) மீடியமான அளவிற்கு சூடு படுத்திக் கொள்ளவேண்டும் இந்த மெஷினை நீங்கள் மின்சாரம் அல்லது பேட்டரி மூலம் இயக்கி கொள்ள முடியும்.
மிஷினை சூடு செய்த பிறகு பவுலில் கலந்து வைத்துள்ளதை இந்த மிஷினில் ஊற்றி மெஷின் மேல் மூடி அழுத்தி பின் மூடி வைக்கவும்.
அடுத்து 3 முதல் 4 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும் அதன் பின்னர் வெளியில் எடுத்துக் கொள்ளலாம் இப்பொழுது வேஃபில் ரெடி.
ரெடியான வேஃபில் வாடிக்கையாளர்கள் கேட்கும் சாக்லேட், வெண்ணிலா, போன்ற வண்ணங்களில் கலந்து கொடுக்கலாம் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆரம்ப முதலீடு
இயந்திரத்தின் விலை ரூபாய் 7000/-
மூலப்பொருள் 5000/- ரூபாய்
மொத்த முதலீடு தொகை வரி உட்பட 15,000/-ரூபாய் வரை நீடிக்கும்.
எங்கு விற்பனை செய்யலாம்
இந்த வேஃபில் தொழிலை பல்பொருள் அங்காடி, வணிக வளாகம், தெருமுனைகளில், மக்கள் அதிகம் உள்ள இடங்களில், இந்த தொழிலை ஆரம்பித்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விற்பனை செய்முறை
ஒரு வேஃபில் செய்வதற்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் ஆகும் நீங்கள் 25 ரூபாய் தயாரித்தால் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
நீங்கள் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் இந்த தொழிலை தொடங்கினார் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும்.
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்ன மாற்றம் உடலில் நிகழும்.
குறிப்பாக பள்ளி கல்லூரி, அரசாங்க அலுவலகம், பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், விளையாட்டு மைதானம், இது போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
How to make biscuit in home new idea 2021
இது ஒரு தனித்துவமான தொழிலாக இருப்பதால் கட்டாயம் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.