எச்சரிக்கை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்.(what are the Corona symptoms for children 2021)
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் இந்நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு.
கொரோனா வைரஸ் பரவல் உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது இதனால் பல நபர்கள் பாதிக்கப்பட்டார்கள் குறிப்பாக 2020 ஆம் ஆண்டு கொரோன தாக்கத்தால் 45 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் அதன் பின்பு மத்திய மாநில அரசுகளின் கடுமையான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸின் 2ம் அலை இந்தியாவை உலுக்கி கொண்டிருக்கிறது பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை தினந்தோறும் குறைந்தது 30 ஆயிரத்தை கடக்கிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டிலும் கொரோனா தாக்கம் காரணமாக பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக 8 மாதம் தொடங்கி 1 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட பல குழந்தைகளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி மிகவும் வேதனைக்குரியது மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் அதிக சக்திவாய்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இல்லை.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட அறிகுறி வெளிப்படையாக தெரியாமல் இருப்பதால் இதனால் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் பல குழந்தைகள் அபாய கட்டத்தில் உள்ளார்கள். குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, மற்றும் கர்நாடகா சேர்ந்த பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஹார்வர்ட் ஹெல்த் (Harvard Health) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வயதானவர்களுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பை விட சிறிய குழந்தைகளுக்கு அறிகுறிகள் வேறுபடலாம் என குறிப்பிட்டுள்ளது. மேலும் அறிகுறிகள் சில குழந்தைகளுக்கு குறைவாக கூட இருக்கலாம் இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் கண்காணிப்பது இந்த நேரத்தில் மிகவும் அவசியமாக உள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறி விவரங்கள்.

சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வறட்டு, இருமல் ஏற்படலாம் இது பொதுவான கொரோனா வைரஸின் அறிகுறிகள் குழந்தைகளுக்கு.
103 டிகிரி முதல் 104 டிகிரி வரை காய்ச்சல் தொடர்ந்து 4அல்லது 5 நாட்களுக்கு இருந்தால் பெற்றோர்கள் இதனை கருத்தில் கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் குழந்தைகளுக்கு.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் கண்டிப்பாக ஆக்ஸி பல்ஸ் மீட்டரை அளவைக் கண்காணித்து அது குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பான செயல்முறை
கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் தவிர குழந்தைகளுக்கு மல்டி சிஸ்டம் எண்ணிக்கை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
MIS-C- நிலைகொண்ட குழந்தைகளின் இதயம், கல்லீரல், நுரையீரல், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை, கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உடம்பில் பல்வேறு உறுப்புகளில் கடுமையான அலர்ஜி ஏற்படும்.
பசியின்மை, தூக்கமின்மை, எரிச்சல், உதடுகளில் நீலநிறம், சிகப்பு கலரில் விரிசல், உதடு ,முகம் மற்றும் மூக்கு வேறு சில கொரோனா வைரஸின் அறிகுறிகள் இவைகள்.
சரியான விளக்கம் எதுவும் இல்லை.
குழந்தைகளுக்கு பரவல் ஏற்பட்டால் அது பெரியவர்களுக்கு பரவுமா என்பது குறித்து சரியான விளக்கம் இதுவரை உலக சுகாதார மையம் கூட வெளியிடவில்லை. பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இதன்காரணமாக அடுத்தவர்களுக்கு பரவாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பெற்றோர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களுடைய குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பெற்றோர்கள் கண்டிப்பாக இதனை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், போன்றவற்றை.
மேலும் வைட்டமின் பி, துத்தநாகம், வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை தினந்தோறும் உணவில் கொடுக்க வேண்டும் .குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள உணவுகளை வழங்கி நோய் எதிர்ப்பு சக்திகளை எப்பொழுதும் அதிகரிக்க செய்வது பெற்றோர்களின் கட்டாய கடமை இந்த சூழ்நிலைகளில்.