What are the Dolo 650 best uses in tamil
டோலோ 650 பயன்பாடுகள் என்ன..!
மருந்து என்பது ஒரு நோயை கண்டறிய குணப்படுத்த சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்தல் என்பது மருத்துவரின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.
உடலில் ஏற்படும் நோய்கள் குணமாக மற்றும் நோய் வராமல் தடுக்க மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி நீங்கள் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஆகவே இந்த விஷயத்தை கருத்தில் கொண்டே இந்த கட்டுரையில் டோலோ 650 மாத்திரையின் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
டோலோ 650 மாத்திரை என்றால் என்ன?
டோலோ 650 மாத்திரை லேசான வலி நிவாரணி என்று மருத்துவர்களால் வகைப்படுத்தப்படுகிறது.
காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது மற்றும் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரை ஆகும்.
குறிப்பாக முதுகு வலி, மூட்டு வலி, பல் வலி, காது வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி, போன்ற பல்வேறு உடல் உபாதைகள் வந்தால் இந்த வலியை போக்க இந்த டோலோ 650 மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
உடலில் ஏற்படும் வலியை குறைக்க நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அல்லது அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்ட நபர்களுக்கு அவர்கள் வலியை சமாளிக்க உதவும் வகையில் இந்த மாத்திரை பெரும்பாலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
டோலோ 650 மாத்திரை பயன்பாடுகள்
What are the Dolo 650 best uses in tamil டோலோ 650 மாத்திரை என்பது பாராசிட்டமால் மாத்திரை (Paracetamol Tablet) வடிவிலும் கிடைக்கிறது.
சரி இதன் பயன்பாடுகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
காய்ச்சலிலிருந்து தற்காலிக நிவாரணம் வழங்க டோலோ 650 மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒற்றைத்தலைவலி உட்பட கடுமையான தலைவலியை போக்க பயன்படுத்தப்படுகிறது.
தசைகளில் லேசானது முதல் மிதமான வலிக்கு பயன்படுத்தலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியையும், தசைப்பிடிப்புகள் தடுக்க இந்த டோலோ 650 மாத்திரை பயன்படுத்தலாம்.
ஒருவருக்கு தடுப்பூசிகள் போட்ட பிறகு ஏற்படும் வலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதற்கு, இந்த டோலா 650 மாத்திரை பயன்படுத்தலாம்.
கீல்வாதம் உள்ளபோதும் லேசான வலியுடன் கூடிய மூட்டு வலியை சமாளிக்க டோலா 650 மாத்திரை பயன்படுத்தலாம்.
யாரெல்லாம் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது
What are the Dolo 650 best uses in tamil உடலில் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த டோலா 650 மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ள கூடாது.
நீங்கள் தீவிரமான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், இந்த டோலா 650 மாத்திரை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
மது பானங்களை எடுத்துக் கொண்டால் இந்த டோலா 650 மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன
What are the Dolo 650 best uses in tamil டோலோ 650 மாத்திரை மருந்துகள் எந்த ஒரு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை, ஆனால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இருப்பினும் எப்போதாவது சில பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு நீங்கள் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
நோய் உணர்வு
கல்லீரல் சேதம்
குமட்டல்
மூச்சுத் திணறல்
கை, கால், முகம், வீக்கம்
தோல் சிவந்து போதல்
ஒவ்வாமை
தீவிரமான சிறுநீரக குழாயில் கசிவு
ரத்த அணுக்கள் இயல்பு
கல்லீரல் நச்சுத்தன்மை
குறைவான வெள்ளை இரத்த அணுக்கள்