what are the Reason BJP growth useful 5 tips
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் இருக்கிறது இதற்கு யார் காரணம்..!
தமிழகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட பாஜக என்ற ஒரு கட்சி மிகவும் சொற்பமான தொண்டர்களை கொண்டு இருந்தது.
ஆனால் இப்பொழுது அதனுடைய வளர்ச்சி என்பது பயங்கரமாக இருக்கிறது, ஏனென்றால் சட்டமன்றத்தில் 5 எம்எல்ஏக்கள் நுழைந்து விட்டார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற்றது.
சமுதாயத்தில் முக்கியப் பொறுப்புகளில், முக்கிய பதவிகளில், முக்கிய துறைகளில் விளங்கும் சில நபர்கள்.
திடீரென்று பாஜக என்ற ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பது தமிழகத்தில் பாஜக எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.
தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசிற்கு அவ்வப்போது அரசியல் ரீதியாக சில அழுத்தம் கொடுப்பது அல்லது திமுக கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்திற்கும்.
எதிராக தொண்டர்களை திரட்டி போராட்டம் செய்வது என்பது பாஜக இப்பொழுது கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம் என்று சொல்லலாம்.
இது ஒரு சாதாரண போராட்டம் என்று கடந்து சென்றுவிட முடியாது ஏனென்றால் நாளுக்கு நாள் இந்த கட்சிக்கு ஆதரவு என்பது தமிழகத்தில் பெருகி கொண்டு இருக்கிறது, இதற்கு என்ன காரணம் என்பது சரியாக கணிக்க முடியவில்லை.
சினிமா பிரபலங்கள் ஆதரவு
சினிமா துறையில் பல முன்னணி நட்சத்திரங்கள் மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வந்தாலும்.
அதையும் தாண்டி உச்சத்தில் இருக்கும் நபர்கள் வெளிப்படையாகவே இப்பொழுது ஆதரவு கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சினிமா நட்சத்திரங்கள் பாஜக என்ற ஒரு கட்சிக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
இது தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த அதிமுக மற்றும் இப்பொழுது ஆட்சி செய்யும் திமுக என்ற இருபெரும் கட்சிக்கு பெரும் தலைவலியாக இனி வரும் நாட்களில் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படும் இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாகவே அவருடைய ஆதரவை தெரிவித்தார்.
அதற்கு அடுத்தபடியாக சிறந்த படைப்பாளியாக வலம் வரும் தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் என்ற ஒரு நட்சத்திரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாகவே ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்த ஆதரவு என்பது எளிதாக கடந்து விட முடியாது ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாஜக கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா அல்லது இல்லையா என்ற ஒரு நிலையில் இருந்தது.
ஆனால் இன்று அதனுடைய வளர்ச்சி என்பது இரு திராவிட கட்சிகளுக்கும் சற்று பயத்தை அதிகரித்துள்ளது.
இதை திராவிட கட்சிகள் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் தமிழகத்தில் சரியாக பணியாற்றினால், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்யும் என்பது உண்மை.
அதிவேக வளர்ச்சிக்கு என்ன காரணம்
இரு திராவிட கட்சிகளும் தொடர்ந்து ஊழலில் சிக்கிக் கொள்வது தான் மூன்றாவதாக பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் அதி வேகமாக வளர்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டது என்று சொல்லலாம்.
இந்த தொழில்நுட்ப காலத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் அரசாங்கம் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தாலும்.
அந்த திட்டத்தை பற்றி புரிந்து கொள்கிறார்கள், அதில் ஊழல் நடந்தால் அதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
திமுக முக்கிய காரணம் பாஜக வளர்ச்சிக்கு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக,தோழமை கட்சிகளுடன் சேர்ந்து, ஆட்சியை கைப்பற்றியது ஆனால் அப்போதுதான் ஒரு தவறு என்பது நடந்தது.
திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு சில கட்சித் தலைவர்கள் பாஜகவை பற்றி பேச வேண்டாம் என்று நேரடியாக மற்றும் மறைமுகமாக அறிவுறுத்தினார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திரு மு க ஸ்டாலின் அவர்கள் அதிமுகவை பற்றி அதிகமாக விமர்சனம் செய்யாமல் குறிப்பாக பாஜகவை பற்றி.
அதிகமாக விமர்சனம் செய்தது பாஜக தமிழகத்தில் காலூன்றவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது, என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
மக்களிடம் சென்ற கருத்து
what are the Reason BJP growth நேர்மறையாகவும் அல்லது எதிர்மறையாகவோ ஒரு கருத்தை பற்றி ஒருவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள் அந்த கருத்து மக்களிடத்தில் எளிதாக சென்று விடும்.
அதுபோலத்தான் திரு ஸ்டாலின் அவர்கள் பாஜகவை பற்றி அதிகமாக தேர்தல் நேரத்தில் விமர்சனம் செய்தது.
தமிழகம் முழுவதும் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது, என்ற ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது.
பாஜக முன்னிலை வகிக்கிறது
what are the Reason BJP growth திமுக கொண்டு வரும் எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி போராட்டத்தை அறிவித்து போராட்டத்தையும் நடத்தி விடுகிறார்கள்.
எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு இது பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது.
தொடர்ந்து போராட்டங்களை செய்து கொண்டே இருக்கும் பாஜகவில் இனிவரும் காலங்களில் அதிகமான தொண்டர்களையும் ஈர்க்க முடியும் என்பது ஒரு உண்மையான விஷயம்.
திமுக செய்த மிகப்பெரிய தவறு
what are the Reason BJP growth திரைப்படத்தில் அல்லது பத்திரிகையில் தொடர்ந்து இந்து மதத்தை பற்றி விமர்சனம் செய்வது அல்லது பாஜகவை விமர்சனம் செய்வது அல்லது பாஜக தலைவர்களை பற்றி நேரடியாக விமர்சனம் செய்வது பாஜகவிற்கு சாதகமாக அமைந்துவிட்டது தமிழ்நாட்டில் வளர்வதற்கு.
விடுதலை சிறுத்தை கட்சிகள், திராவிட இயக்கக் கழகங்கள், மே 17 இயக்கம், மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், போன்ற கட்சி தலைவர்கள்.
எங்கு சென்றாலும் இந்து மதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்ற ஒரு குரலை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது மக்களிடத்தில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த ஒரு முக்கியமான காரணம் பாஜகவிற்கு மக்கள் நாளுக்கு நாள் ஆதரவு கொடுக்க அமைந்துவிட்டது.