what are the reason kidney stone new tips 2022
சிறுநீரக கல் வராமல் இருக்க சில எளிய இயற்கை குறிப்புகள்..!
பொதுவாக இன்றைய கால கட்டங்களில் இருக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களால் சிறுநீரக சம்பந்தமான பல்வேறு நோய்களை மக்கள் சந்திக்கிறார்கள் அதில் முக்கியமானது இந்த சிறுநீரக கல் பிரச்சினை.
உடலில் நீர் பற்றாக்குறை போன்ற சில காரணமாக ரத்தத்தில் நீர் பிரியும் போது ஏற்படுவதுதான் சிறுநீரகக்கல்.
இந்த சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது என்பதையும் அதற்கான காரணங்களையும், சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் இந்த கட்டுரை மூலம்.
முக்கியமான சில காரணங்கள் சிறுநீரக கல் உருவாக
இந்த பிரச்சனை தோன்றுவதற்கு முக்கிய காரணம் என்றால் சுற்றுச்சூழல் இருக்கிறது, அதாவது நீங்கள் குடிக்கும் குடிநீரில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து இருந்தால், இந்த சிறுநீரகக் கற்கள் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
உங்களுடைய உயரம், வயது, உடல் எடைக்கு,தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வழிவகை செய்கிறது.
சிறுநீர் கழிக்காமல் அதிகநேரம் தேக்கி வைப்பதால் இந்த கற்கள் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
பரம்பரை காரணமாக இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது அதாவது உங்களுடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டிருந்தால், உங்களுக்கு கண்டிப்பாக வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீரக கல் தோன்றினால் அதற்கான அறிகுறி
அடிவயிற்றில் கடுமையான வலி அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டால் சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்று அர்த்தம்.
இந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக இதற்கான மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது, அதுமட்டுமில்லாமல் ஸ்கேன் செய்து முழுவதும் சோதனை செய்து கொள்வது நல்லதாக அமையும்.
சிறுநீரக கற்கள் குணமாக என்ன செய்வது.
பொதுவாக மருத்துவர்கள் சிறுநீரக மண்டலத்தில் கற்கள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை பொறுத்துதான் அதற்கான சிகிச்சையைத் தொடர ஆரம்பிப்பார்கள்.
குறிப்பாக சிறுநீரக கற்கள் 5 மில்லி மீட்டர்க்கு சிறியதாக இருந்தால் மருந்து மாத்திரை மூலம் கரைத்துவிட முடியும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மேலும் இந்த சிறுநீரக கற்களை நீக்குவதற்கு பல அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் இப்பொழுது உள்ளது.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருப்பதற்கு என்ன வழி
உங்கள் உடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஆட்டிறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை அதிக அளவில் தினமும் எடுத்துக் கொள்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வாழை தண்டில் தாதுக்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் அதிகம் உதவுகிறது, எனவே தினமும் உணவில் அதிக அளவு வாழைத்தண்டு சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லதாக அமையும்.
சுவையான ரவா குலோப்ஜாம் செய்வது எப்படி..!
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும், உணவில் அதிக அளவில் சோடியம் நிறைந்த உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்த்தால் நல்லதாக அமையும்.
8 Best tips how to reduce stubborn belly fat
சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் ஜூஸ், எலுமிச்சை பழம் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், அதிக அளவில் எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் வராமல் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.