புதிய குரங்கு பி வைரஸின் அறிகுறிகள் என்ன எப்படித் தப்பிப்பது(what are the symptoms Monkey B virus 2021)
இப்பொழுதெல்லாம் சீனா என்றாலே மனித குலத்திற்கு ஒரு இனம்புரியாத ஒரு பயம் தோன்றி விட்டது ஏனென்றால் அந்த நாட்டிலிருந்து புதிய புதிய வைரஸ்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்த வைரஸ்களை எதிர்கொள்வதற்கு சரியான தொழில் நுட்பம் நம்மிடம் இருந்தும் அவைகளை கட்டுப்படுத்த முடியாமல் உலக விஞ்ஞானிகள் திணறி வருகிறார்கள் இதற்கு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் வைரஸ்களின் எண்ணிக்கை மட்டுமே முதன்மையாக உள்ளது
இப்பொழுது சீனாவில் ஒரு புதிய குரங்கு பி வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது இந்த வழக்கானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இறந்துபோன குரங்குகளை பிரிக்கும்போது அவருக்கு தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்கள்
சீனா கடந்த வாரம் ஒரு புதிய செய்தியை வெளியிட்டது அது என்னவென்றால் குரங்கு பி வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட அந்த கால்நடை மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிக்கைகளின் படி வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவரிடம் செரிப்ரோஸ்பைனல் சோதனை செய்ததில் அவருக்கு ஆல்பாஹெர்பெஸ்வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இறந்துபோன அவரின் உடலிலிருந்து கொப்புளத்தின் திரவம், இரத்தம், நாசி மற்றும் தொண்டை மாதிரிகள் மற்றும் பிளாஸ்மா ஆகியவை சேகரிக்கப்பட்டது.
இந்த மாதிரிகள் அனைத்தும் சீனாவின் சி.டி.சி-ன் வைரஸ் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு அவருக்கு குரங்கு பி வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது
குரங்கு பி வைரஸ் என்றால் என்ன.
பழைய குரங்குகளின் ஒருவகை இனத்தால் இந்த வைரஸ் பரவுகிறது சிம்பான்சிகளையும், காப்புசின்குரங்குகளையும், இந்த வைரஸ் பாதிப்பதோடு மரணத்தையும் ஏற்படுத்திவிடுகிறது பொதுவாக குரங்கு பி வைரஸ், ஹெர்பெஸ் பி,ஹெர்பெஸ்வைரஸ் சிமியா மற்றும் ஹெர்பெஸ்வைரஸ் பி ஏன்றும் குறிப்பிடப்படுகிறது.
எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது இந்த வைரஸ்.
இந்த வைரஸை 1932ஆம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்தது இந்த குரங்கு பி வைரஸ் தொற்று மக்களிடையே தோன்றுவது மிகவும் அரிதானவை என்றும் இதுவரை 50 நபர்கள் மட்டுமே இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் குரங்கு பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 21 நபர்கள் மட்டுமே உயிருடன் உள்ளார்கள் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
சீனா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சீனா அறுவை சிகிச்சை நிபுணர்கள் குரங்கு பி வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இது மனிதனுக்கு மனிதன் குறித்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
முதன் முதலில் 1932 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 50 வழக்குகளும் குரங்குகளால் கடித்து அல்லது கீறப்பட்ட அல்லது குரங்குகளில் இருந்து வெளியேறும் திசுக்கள் அல்லது திரவங்கள் அல்லது ரத்தம் உடைந்த தோளில் சேகரிக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இந்த வைரஸின் அறிகுறிகள் என்ன
குரங்கு பி வைரஸ் பொதுவான அறிகுறிகள் முதலில் காய்ச்சல் தோன்றுவது பின்பு குளிர் தலைவலி உடல் சோர்வு ஆகியவைகள் அடங்கும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடலில் சிறிய அளவில் கொப்புளங்கள் உருவாகும் மேலும் மற்ற அறிகுறிகளான மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, அடிவயிற்றுவலி, வீக்கம், ஆகியவை ஆரம்பிக்கும்.
உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைக்க 6 எளிய வழிகள்
குரங்கு பி வைரஸ் நோய் தொற்று நிலைமை தீவிரமாகும் போது மூளை மற்றும் முதுகு எலும்பு வீக்கத்திற்கு வழிவகுக்கும் இதன் விளைவாக நரம்பியல் மற்றும் அலர்ஜி அறிகுறிகள் தசை ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் மூளை பாதிப்பு மற்றும் நரம்பு மண்டலத்தின் கடுமையான சேதம் ஆகியவை ஏற்படும் இது இறுதியில் மரணத்தை ஏற்படுத்திவிடும்.
Cinnamon helps in better hair growth 3 tips
இந்த வைரஸின் அறிகுறிகள் ஒரு நாள் முதல் மூன்று வாரங்கள் வரை வேறுபடலாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து