மருத்துவர்கள் எச்சரிக்கை கொரோனா வைரஸுக்கு பின்பும் நீடிக்கும் பாதிப்புகள்.(what are the the after corona symptoms 2021)
மருத்துவர்களின் எச்சரிக்கை கொரோனா குணம் அடைந்த பின்பும் தொடரும் பாதிப்புகள்.
கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதித்து சிகிச்சை முடிந்த பின்பும் நோயாளிகளுக்கு ஒரு சில அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவற்றை கவனிக்க வேண்டிய அறிகுறிகள் பற்றியும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ்க்கு பின்பு எத்தகைய பாதிப்புகள்.

கொரோனா நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த பின்பு இந்த கொரோனா ஏற்படுத்திய தாக்கம் உடலில் அப்படியே இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் மேலும் அப்படி உள்ள ஒருசில அறிகுறிகளை எப்பொழுதும் அலட்சியப் படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள் அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
கொரோனா வைரஸின் தீவிர தொற்று தன்மையால் நீண்ட கால போராட்டத்திற்கு பின்பு குணமடைந்தாழும் ஒருசிலருக்கு நீண்டகால உடல்நல குறைபாடு ஏற்படும் என்றும் வாழ்வியல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும் ஆய்வுகள் கூறுகின்றது மற்றும் இந்த நிலை மாரி இலேசான பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்தவர்கள் தீவிர பாதிப்பு ஏற்படுவது தற்போது நிரூபணமாகியுள்ளது.
ஞாபகமறதி, உடலில் தசைப்பிடிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, உடலில் ஹார்மோன் பிரச்சினைகள், மாரடைப்பு, இதய நோய் பிரச்சனைகள், சிறுநீரக பாதிப்புகள் போன்றவை உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
இவற்றைவிட மனிதனின் மனம் சார்ந்த சிக்கல்கள்தான் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது இவற்றைத் தவிர்க்க சிகிச்சை முடிந்த பின்பும் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அன்றாட வாழ்க்கையில் முறையாக செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இது போல் உடலில் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய வேண்டும் அடிக்கடி பசி எடுப்பது, தாகம் எடுப்பது, சருமம் வலுவிழந்து இருப்பது, சோர்வு அதிகமாக இருப்பது, அடிக்கடி அதீத பசி, உடலிலுள்ள காயங்கள் ஆறாமல் இருப்பது, தலைச்சுற்றல், உடல் அடிக்கடி கூசுதல் போன்ற அறிகுறி உள்ளவர்கள்.
தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு எப்போது புதிய அரசு எடுக்கப்படும் முடிவுகள் என்ன.
அடிக்கடி சிறுநீர் வருவது, பாதம் வீங்குவது, உடல் எடை குறைதல், செரிமான பிரச்சனை, போன்ற பாதிப்புகள் உடலில் தோன்றினால் உடனடியாக சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இருதயத் துடிப்பு சீரற்று இருப்பது, ரத்தம் கட்டுவது, மாரடைப்பு, இரூதயே அலர்ஜி போன்ற பாதிப்புகளால் இருதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.