புதிதாக பரவும் மஞ்சள் பூஞ்சை நோய் கருப்பு வெள்ளை பூஞ்சைகளை விட இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்(What are the Yellow fungus symptoms 2021)
மும்பையில் முதலில் 2 நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பின்பு நாடு முழுக்க இந்த கரும்பு பூஞ்சை C0VID-19 நோயாளிகளை தாக்குவது என்று செய்திகள் வெளிவந்த நிலையில் உள்ளது இதனிடையில் அவசர அவசரமாக மத்திய சுகாதாரத்துறை இந்தக் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிக்கும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.
இதனிடையே பீகார் தலைநகர் பாட்னாவில் 4 நபர்களுக்கு வெள்ளை பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்கனவே கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை என்று மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் இப்போது மற்றொரு அதிர்ச்சியூட்டும் செய்தி மஞ்சள் பூஞ்சை என்ற ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் நோயாளி ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு நிபுணர் பிரிஜ் பால் தியாகி தலைமையிலான மருத்துவக் குழு அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மருத்துவர்கள் வெளியிடும் எச்சரிக்கை.
இந்த மஞ்சள் பூஞ்சை கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகளை விட மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் ஏனெனில் உடலில் ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டால் அது சரியாகி குணம் அடைவதற்கு மிகவும் காலம் பிடிக்கும் என்ற மோசமான நிலைக்கு மஞ்சள் பூஞ்சை உடலை தள்ளி விடும் என்கிறார்கள்.
இதற்கு சிகிச்சை முறை என்ன.
பிற பூஞ்சை நோய்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அம்போட்டெரிசின் பி ஊசியை செலுத்தும் சிகிச்சை மட்டுமே உள்ளது . உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயலிழிக்க செய்யும் அளவிற்கு மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் எனவே அறிகுறிகளை கவனித்தால் உடனே உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் பூஞ்சை நோயின் அறிகுறிகள்.
இந்த நோயின் அறிகுறிகளாக சோம்பல், பசியின்மை அல்லது பசி எடுப்பது குறைவாக இருத்தல் திடீரென்று உடல் எடை இழப்பு நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.
இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன.
மோசமான சுகாதார சூழ்நிலை இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் உங்கள் வீடு மற்றும் நீங்கள் வேலை செய்யக்கூடிய இடம் நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பூஞ்சை நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாப்பது சுகாதாரம் மட்டுமே.
மிக கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்துக்கொண்டு அடுத்த நாளில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் கழிவரை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் உங்கள் கழிவறையில் மலம் தேங்கி இருக்கக்கூடாது. கழிவு பொருட்களால் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்று பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஈரப்பதம் இல்லாமல் வீட்டை பராமரிக்க வேண்டும்.
வீட்டில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கக்கூடாது நன்கு காய்ந்த நிலையில் வீட்டின் தரையை நீங்கள் பராமரிக்க வேண்டும் இதற்கு சூரிய ஒளி உங்கள் வீட்டிற்குள் வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள் நன்கு காற்றோட்டமாக இருக்கவேண்டும் இரண்டுக்கும் வழி இல்லாவிட்டால் உங்கள் வீட்டில் மின்விசிறி மூலம் ஈரப்பதத்தை குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
simple 3 tips How to prevent black fungus