தடுப்பூசி போட்ட பிறகு இந்த விஷயங்களை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்(what can do and don’ts Now covid-19 vaccine)
மனித வாழ்க்கையில் 21ம் நூற்றாண்டில் ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் அது இந்த கொரோனா வைரஸ் மட்டுமே இப்பொழுது இந்த வைரஸில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழி அது தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே
வைரஸில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க இது மட்டுமே முன் ஆயுதமாக உள்ளது வைரசுக்கு எதிராக
இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அந்தந்த நாடுகள் மக்களுக்கு தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்திக்கொண்டு வருகிறது மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்
தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட நபர்கள் கூட அவர்கள் மீண்டும் தங்களுடைய பழைய வாழ்க்கையை அவ்வளவு எளிதாக தொடர முடியாது ஏனெனில் தடுப்பூசி போட்டாலும் கொரோனா வைரஸ் அந்த நபர்களை தாக்கும் என்பது உண்மையான ஒரு விஷயம் தடுப்பூசி போட்ட பிறகு செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாத வழிமுறைகளை மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்டுள்ளார்கள்
இந்த வைரஸை உலகில் உள்ள விஞ்ஞானிகள் கணிக்க முடியாமல் இருப்பதற்கு அது விரைவில் உருமாற்றம் அடைகிறது மற்றும் ஒரு நபருக்குள் இந்த வைரஸ் சென்றால் அதன் அறிகுறிகள் என்பது சிலருக்கு தீவிரமாக இருக்கிறது சில நபர்களுக்கு அறிகுறிகள்யற்ற வைரஸ்யாக இருக்கிறது சில நபர்களுக்கு மிதமாகா இருக்கிறது மேலும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸின் உருமாற்றம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது
தடுப்பூசிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும்போது வைரஸ்கள் எதிர்காலத்தில் உருமாற்றம் அடைந்தாள் அதன் தீவிரத்தன்மை மற்றும் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதை தவிர்ப்பதற்கு என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு தடுப்பூசிகளை தயாரிக்கிறார்கள் இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகிறது
ஒருவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் உங்கள் உடல் பழைய நிலையை அடைந்து விடும்
இது உங்களை வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் பாதுகாக்காது மேலும் நீங்கள் இந்த வைரஸ் நோய்யை மற்றவர்களுக்கு பரப்பலாம் குறிப்பாக இந்தியா போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் நிறைந்துள்ளது
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் திங்கட்கிழமை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்ன செய்ய முடியும் மற்றும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டபிறகு ஏன்னா செய்யக்கூடாது என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் செல்லலாமா
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் செலுத்தி கொள்ளாதவர்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பார்கள், ஜிம், ஹோட்டல்கள், திருமணங்கள், பொதுப் போக்குவரத்து, போன்ற மக்கள் நெரிசலான பகுதிகளை தவிர்ப்பது நல்லதாகும்
தடுப்பூசி போட்டுக் கொண்டால் குடும்பத்தில் எப்படி நடந்து கலாம்
சிடிசி வழிகாட்டுதலின்படி உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் பெற்றோர்கள் குழந்தைகள் அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்கள் முழுமையான தடுப்பூசி எடுத்துக் கொண்டால்
நீங்கள் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பொழுது முகக்கவசம் அல்லது சமூகஇடைவெளி கடைபிடிக்காமல் சிறிது உட்புறம் அல்லது வெளிப்புறம் இருக்கும் இடங்களில் சந்திப்பது பாதுகாப்பானது
தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை எப்படி சந்திக்கலாம்
ஒரே குடும்பத்தில் இருக்கும் நபர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நபர்களை சந்திக்கலாம் இதனால் மிகப்பெரிய ஒரு ஆபத்து நிகழ்வதில்லை இருப்பினும் சமூக இடைவெளி என்பது கடைப்பிடிப்பது முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவுவது போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்
குடும்பத்தில் இருக்கும் நபர்களில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது அந்த குடும்பத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவும்
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யலாமா
தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் நகரம் அல்லது நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது
ஏனென்றால் இந்த வைரஸ் தினம்தோறும் புதியபுதிய மாறுபாடுகளை தன்னுள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது இதனால் முடிந்தவரை பொதுவெளியில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லதாகும்
MOST READ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சத்து
தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்ட நபர்கள் வைரசை பொதுவெளியில் பரப்புவார்களா
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வைரசுக்கு எதிராக ஓரளவுக்கு பாதுகாப்பை நீங்கள் வழங்குவதால் இந்த வைரஸை பொதுவெளியில் பரப்ப முடியாது என்று அர்த்தம் இல்லை உங்கள் உடலில் வைரஸ் ஆரோக்கியமாக இருந்தால் பொதுவெளியில் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு
இருப்பினும் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலம் அந்த வைரஸை உங்கள் உடலில் அழித்துவிடும் ஆனால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவது நிச்சயமாக விஷயம்
இந்த வைரஸ் உருமாற்றம் அடைவது அதிகரித்து இருப்பதால் இதனைப்பற்றி கூடுதல் சான்றுகள் தேவை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
பெற்றோர்களின் நிலைமை இந்த சூழ்நிலையில்
இன்று வரை இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முதல் கட்ட சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது
கோவாக்சின் VS கோவிஷீல்ட் எது நல்லது
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான மத்திய அரசின் அனுமதி என்பது இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம் சிடிசி வழிகாட்டுதலின்படி தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் எந்த ஒரு முகமூடி அல்லது சமூக இடைவெளி இல்லாமல் வீட்டுக்குள் குழந்தைகளை சந்திக்கலாம்
Covid-19 patients must need for best food
குழந்தைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகமாக இருப்பதால் கடுமையான அறிகுறிகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளை எப்பொழுதும்போல் பாதுகாக்கலாம்