What is artificial rain full details 2022

What is artificial rain full details 2022

செயற்கை மழை எப்படி பொழிகிறது இதனால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் ஆபத்து என்ன..!

நீர் திவலைகளாக மாறும் பொழுது எடை அதிகரிக்கும், மேகங்களுக்கு உள்ளே இருக்கும் இந்த நீர் திவலைகள் காற்றினால் வானில் தள்ளப்பட்டு மலைமுகட்டினாலோ  அல்லது எதிர்விசை காற்றினாலோ தடுக்கப்படும் போது புவியீர்ப்பு விசையால் பூமியில் இழுக்கப்பட்டு மழை பொழியும்.

சில சமயங்களில் வானில் அதிகமாக குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டால், மேற்படி பனிக் கட்டிகளாக மாறி மழையாக பூமியில் பொழியும்.

தற்பொழுது அதிநவீன அறிவியல் வளர்ச்சி காரணங்களாக செயற்கையான வானிலை மாற்றங்கள் ஏற்படுவது எளிமையாகி விட்டது, அது செயற்கை மழை என்பதாகும்.

தூய தமிழில் இதற்கு மேக விதைத்தல் என்று பெயர்.

முதன்முதலில் இந்த உலகத்தில் செயற்கை மழை பற்றிய ஆராய்ச்சி 1903ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டது, ஆனாலும் 1960-ம் ஆண்டு தான் முதன் முதலாக ஆஸ்திரேலியாவில் செயற்கை மழை முயற்சி பெரும் வெற்றி பெற்றது.

இப்பொழுது சில வருடங்களாக இந்த செயற்கை மழை ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடு சவுதி அரேபியா, இன்றைய ஆராய்ச்சியாளர்கள் மூன்று நிலைப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.

What is artificial rain full details 2022

நிலைப்பாடுகள் என்றால் என்ன

முதல் நிலைப்பாடு என்பது வானில் காற்றழுத்தத்தை அதிகமாக உருவாக்குதல்.

இரண்டாவது நிலைப்பாடு மேகங்களை ஒன்று சேர்த்தல்.

மூன்றாவது நிலைப்பாடு மேகங்களை கடுமையாக குளிர்வித்தல் என்பதாகும்.

இதில் வானில் காற்றழுத்தத்தை உருவாக்குவதற்கு தேவையான ரசாயனங்கள் கால்சியம், கார்பைடு கால்சியம் ஆக்சைடு, யூரியா, அமோனியம் நைட்ரேட், கலந்த கலவையை.

விமானம் அல்லது பீரங்கி போன்றவற்றின் மூலம் மேகத்தில் கொண்டுபோய் விடுவது உடனே அந்த ரசாயனம் மேகத்திற்குள் வினைபுரிந்து அங்கு ஈரப்பதத்தை அதிகரித்துவிடும், அதன் விளைவாக அங்கு காற்றழுத்தம் அதிகமாக ஏற்படும்.

அதைத்தொடர்ந்து அதன் அருகில் இருக்கும் மேகங்களை ஒன்று சேர்த்து அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டும்.

அதற்கு மறுபடியும் உப்பு, யூரியா, அம்மோனியம், நைட்ரேட், உலர் பனி, (கார்பன்-டை-ஆக்சைடு) அழுத்தம் கொடுத்தல் போன்ற வேதிப்பொருட்களை மறுபடியும் மேகங்களின் மேல் தூங்கிவிடுவார்கள், அடர்த்தி கூடுவதால் ஏராளமான தண்ணீர் துகள்கள் அங்கு அதிகமாக சேமிக்கப்படுகிறன.

இந்த தண்ணீர் துகள்களை மறுபடியும் குளிர்வித்தல் பூமிக்கு மழையாக கிடைக்கும், இதற்கு சில்வர் அயோடைடு மற்றும் உலர் பணியை தூவினால் போதும்.

மேற்படி மூன்று படிகளிலும் அதிகமான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள், ஒருவேளை அதன் அளவு அதிகமாகி விட்டால் பெய்யும் மழையில் அந்த வேதிப்பொருட்களும் கலந்து வரும்.

What is artificial rain full details 2022

உயிரினங்கள் பாதிப்புக்கு அதிக வாய்ப்புகள்

இதனால் மனிதர்கள், உயிரினங்கள், பாலூட்டிகள் மற்றும் தாவரங்கள், பறவையினங்கள், அனைத்திற்கும் அதிகமான கேடு விளைவுகள் ஏற்பட்டுவிடும் ஒருவேளை முற்றிலும் அழியும் நிலை கூட வரலாம்.

இந்த தீமைகள் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு மழை பொழிவதால் மூலம் நேராது, இதை ஒரு தொழிலாக வைத்து தொடர்ந்து ஆண்டு கணக்காக இந்த செயற்கை மழையை பொழிய வைத்தால் மட்டுமே மேற்படி தீமைகள் ஏற்படலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இப்பொழுது இந்த முறையை விட இன்னும் நவீனமான விமானம் மூலம் மின்சாரத்தை மேகக்கூட்டங்கள் நடுவில் பாய்ச்சி சேர்க்கை மழையை சமீபத்தில் சவுதி அரேபியாவில் வைத்து வெற்றி பெற்றுள்ளார்கள்.

இதுபோக இன்னொரு புதிய முறையில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் மேகங்களை நோக்கி லேசர் ஒளியை ஊடுருவி விட்டார்கள்.

அப்போது வளிமண்டலத்தில் இருக்கின்ற (நைட்ரஜன்-டை- ஆக்ஸைடு), (சல்ஃபர்-டை-ஆக்சைடு),மேக விதைத்தல் துண்டிகளாக மாற்றி அதன் மூலமாக நீர் திவலைகள் ஏற்பட்டு செயற்கை மழையை பொழிய வைத்து பெரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

சீனாவின் மிகப்பெரிய திட்டம்

சீனாவின் திபெத் பீடபூமியில் 1.6 பில்லியன் சதுர கிலோ மீட்டரில் இந்த செயற்கை மழையை தோற்றுவிக்க சுமார் 500 கலன்கள் அமைக்கப்பட்டு.

அதில் சில்வர் அயோடைடு போன்ற ரசாயனங்களை உற்பத்தி செய்து நேரடியாக மேகங்களுக்கு அனுப்பி ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் சீன நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் மொத்த மாலையோடு 7% நிவர்த்தி ஆகிவிடும், என்று சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது நமது இந்தியாதான் எப்படி என்றால் இந்த மேகங்களை ஒன்று சேர்க்கும் பொழுது, அருகில் இருக்கின்ற அனைத்து மேகங்களையும் இது ஒன்றாக இழுத்து வைத்துக் கொள்ளும்.

நம் நாட்டில் இருக்கின்ற மேகம்மானாலும் சரி, இந்தியாவுக்கு கிடைக்கக் கூடிய மழை பொலிவு இருந்தாலும் சரி, அதை சீனா தன் நாட்டிற்குள் இழுத்துக் கொள்வதால், இந்தியாவில் பருவநிலை மாற்றங்கள் கடுமையான பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இன்னும் முழுமையாக சொல்லப்போனால் அதிக நாடுகளுக்கு மழைப்பொழிவு அறவே கிடைக்காது, ஆனால் இதில் தொடர்ந்து ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே மழைப்பொழிவு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

அந்த ஒரு சில நாடுகளில் ரஷ்யா, சவூதி அரேபியா, மற்றும் சீனா நிச்சயம் வரும் காலங்களில் இடம்பெறும். ஏனென்றால் இந்த 3 நாடுகள்தான் செயற்கை மழை முயற்சியை ரொம்ப அதிகமாகவும், வேகமாகவும், செய்து வருகின்றன.

திட்டத்தை முழுமையாக கைவிட்ட ஆஸ்திரேலியா

செயற்கை மழையை முதலில் கண்டுபிடித்தது ஆஸ்த்ரேலியாதான் இருந்தாலும் தற்போது ஆஸ்திரேலியாவில் முற்றிலும் இந்த முறை தடை செய்யப்பட்டுள்ளது.

தொப்பையை எளிதாக குறைக்க எவரும் சொல்லாத ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

காரணம் அங்கு பலவிதமான இனக்கலப்புகள் இருப்பதால் இந்த ரசாயனங்கள் அந்த இனங்களை முற்றிலும் அழித்துவிடும் என்பதால் அந்த நாடு தடை செய்துள்ளது.

What is the artificial intelligence 5 benefits

இந்த செயற்கை மழையை பொழிவிக்க ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் முயற்சி செய்ய முடியும், நாடுமுழுவதும் முயற்சி செய்ய முடியாது.

அந்த குறிப்பிட்ட இடத்தில் செயற்கை மழை பொழிய வைக்க அதிகமான பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

Leave a Comment